- Advertisement -
Homeபொழுதுபோக்குமாநாடு திரைப்படத்தின் இந்தி ரீமேக்.. ஹீரோ மற்றும் வில்லன் யார் தெரியுமா? - வெளியான முக்கிய...

மாநாடு திரைப்படத்தின் இந்தி ரீமேக்.. ஹீரோ மற்றும் வில்லன் யார் தெரியுமா? – வெளியான முக்கிய தகவல்

- Advertisement -

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. இந்த திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்ப்பார்த்ததை விட பெரிய ஹிட் அடித்தது.

simbu

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடத்திருந்தார். டைம் லூப் ஜானரில் உருவான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் கதாப்பாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அந்த படத்தில் இடம்பெற்றிருந்த வந்தான், சுட்டான், செத்தான் என்ற டைலாக் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. இந்த திரைபடத்தை தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த திரைப்படத்தை தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் கதநாயகனாக நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது. தெலுங்கில் ரவிதேஜாவும், இந்தியில் வருண் தவணும் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் ‘மாநாடு’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ராணா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பிரவீன் சத்தா இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க ரவிதேஜாவிடம் பேசி வருவதாக தெரிகிறது. இருப்பினும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்று தெரியவில்லை. ‘மாநாடு’ தெலுங்கு, இந்தி ரீமேக் படப்பிடிப்புகளை ஒரே நேரத்தில் தொடங்க திட்டமிட்டு இருபதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்