- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயை நான் உண்மையாக காதலித்தேன், அடுத்த பாய்ச்சலுக்கு தயாரான நடிகை வனிதா விஜயகுமார் -...

நடிகர் விஜயை நான் உண்மையாக காதலித்தேன், அடுத்த பாய்ச்சலுக்கு தயாரான நடிகை வனிதா விஜயகுமார் – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகி என்று பெயர் வாங்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மூத்த மகள். 3 திருமணங்கள் செய்து 3 கணவர்களையும் விவாகரத்து செய்துவிட்டு இப்போது முரட்டு சிங்களாக தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இளையராஜாவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட மோதல் அனைவரும் அறிந்ததுதான்.

கடந்த 1995ம் ஆண்டில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில்தான் வனிதா விஜயகுமார் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் வனிதா கதாநாயகி. ஹீரோவாக நடிகர் விஜய் நடித்திருந்தார். முதல் படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

- Advertisement -

இளம் வயது விஜய் மற்றும் வனிதா ஜோடி அந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் தொடர்ந்து மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த வனிதா விஜயகுமார் பிறகு பல சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒருமுறை போட்டியாளராக கலந்துக்கொண்டார். தொடர்ந்து தேவி, நான் ராஜாவாக போகிறேன், அநீதி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் வனிதா விஜயகுமார் இணைந்து நடித்த படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை வனிதா விஜயகுமாரே கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செய்திருந்தார். அவரே கதாநாயகியாகவும் நடித்திருந்தார். வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் இந்த படத்தை முதன்முறையாக தயாரித்து இருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை வினிதா விஜயகுமார், அவரது முதல் படம் சந்திரலேகா படம் குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, சந்திரலேகா படப்பிடிப்பு நடந்தபோது நடிகர் விஜய்யை நான் உண்மையாகவே காதலித்தேன். அந்த படத்தில் இடம்பெற்ற சில காதல் காட்சிகள் அதனால்தான் மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கும்.

அதற்கு காரணம், சந்திரலேகா படத்தில் நான் நடித்த போது தத்ரூபமாக அந்த காட்சிகளில் நடிப்பதற்கு உண்மையாகவே படத்தின் நாயகன் விஜயை காதலிப்பதாக மனதார உணர்ந்து நடித்தேன். எங்க அம்மா இந்த படத்தில் கதாநாயகியாக தான் என்னை நடிக்க சொன்னாங்க. ஆனால் நான் காதல் காட்சிகளில் உண்மையாகவே விஜய் மீது காதல் உணர்வுடன் கட்டிப்பிடித்து உண்மையாக நடித்தேன் என்று வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார். இது இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்