நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற அடையாளங்களும் நடிகர் தனுஷூக்கு இருக்கிறது. வுண்டர்ஃபார் பிலிம்ஸ் என்ற பெயரில் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.
அடுத்ததாக தனுஷ் டைரக்ஷன் செய்த இட்லி கடை என்ற படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படத்தில் தனுஷ் நடித்து முடித்த நிலையில், இப்போது போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான படம் குபேரா.
தமிழில் இந்த படம் சரியாக போகவில்லை.
நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை இருவரும் முறித்துக் கொண்டு கடந்த ஆண்டில் முறைப்படி கோர்ட்டில் விவாகரத்து பெற்றனர்.
இதுவரை நடிகர் தனுஷ் பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். இப்போது மீண்டும் ஒரு பிரபல நடிகையுடன் அவர் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் என்ற படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமாகி பிரபலமானவர் மிருணாள் தாகூர். அவர் நடித்த சன் ஆப் சர்தார் 2 என்ற இந்தி படம் கடந்த வாரம் வெளியானது.
அந்த படத்தின் பிரிமியர் காட்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். மேலும் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நடிகை மிருணார் தாகூரின் பிறந்தநாள் பார்ட்டியிலும் நடிகர் தனுஷ் பங்கேற்றார். இப்போது நடிகர் தனுஷின் இட்லி கடை பாடலுக்கு மிருணாள் தாகூர் வைப் செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் தனுஷூம் மிர்ணாள் தாகூரும் நெருக்கமாக ஒன்றாக வந்து பேசிய வீடியோ ஒன்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்களை எல்லாம் ஒன்றிணைத்து நடிகர் தனுஷ் மிருணாள் தாகூர் இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள், காதலிக்கிறார்களா என்று பாலிவுட் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பல நடிகைகளுடன் நடிகர் தனுஷ் இப்படி நெருக்கமான நட்பில் இருப்பதாக கிசு கிசு பரவியுள்ளது. இப்போது நடிகை மிருணாள் தாகூருடன் அவர் நெருக்கமாக இருப்பதால் அவர்கள் காதலிக்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மைதானா அல்லது வெறும் பிரண்ட்ஷிப் தானா என்ற குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.





