நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 700க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கூலி படம் ரிலீஸானது. தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த வார் 2 படம் தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.
இல்லை எனில், கூலி படம் 900க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ்நாட்டில் ரிலீஸாகி இருக்கும். எனினும் தமிழக அரசின் சிறப்பு அனுமதியுடன் காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் கூலி ரிலீஸானது. ஆந்திரா கர்நாடகா கேரளம் மாநிலங்களில் காலை 6 மணிக்கும் யுனைடெட் ஸ்டேடர் அமெரிக்கா நாடுகளில் அதிகாலை 4 மணிக்கும் கூலி படம் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் என்ற மிகப்பெரிய காம்போவில் உருவான கூலி படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைக்கும் என்றும் உறுதியாக நம்பினர்.
ஆனால் கதை திரைக்கதை இயக்கத்தில் ஒட்டுமொத்தமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொதப்பி விட்டார். எந்தவிதங்களிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு லாஜிக்கே இல்லாத கதையில் இந்த படத்தை எடுத்து ரஜினிக்கு ஒரு மோசமான படத்தை தந்து ரசிகர்களுக்கும் விரக்தியை கொடுத்து விட்டார். சத்யராஜ் அமீர்கான் உபேந்திரா நாகர்ஜூனா என பலர் நடித்தும் படம் படுத்து விட்டது.
இந்த படத்தில் 2 ஆறுதலான விஷயம் வில்லனாக நடித்த மலையாள நடிகர் சௌபிர் சாஹிரும் அவரது மனைவியாக நடித்த நடிகை ரக்சிதா ராம்தான். அதே போல் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தை பின்னணி இசையிலும் பாடல்களிலும் முடிந்தவரை காப்பாற்றி இருக்கிறார். ஆனாலும் படம் காட்டு மொக்கை என்ற விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
இந்த சூழலில் கூலி படம் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை விட 2 சாதனைகளை செய்திருக்கிறது. அதில் ஒன்று லியோ படம் வெளியான போது முதல் நாள் முன்பதிவு வசூல் 105 கோடி ரூபாய் என்ற நிலையில், அதைவிட கூலி படம் ரூ. 5 கோடி அதிகமாக ரூ. 110 கோடி வசூலித்திருக்கிறது. அதே போல் லியோ படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 148 கோடி என்ற நிலையில், கூலி படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 155 கோடி வரை நடந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





