- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடை இசை வெளியீட்டு விழாவை திடீரென ரத்து செய்த இயக்குனர் தனுஷ் - மீண்டும்...

இட்லி கடை இசை வெளியீட்டு விழாவை திடீரென ரத்து செய்த இயக்குனர் தனுஷ் – மீண்டும் நடக்குமா? இதற்கு இசைஞானி குறுக்கீடுதான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் அவரது இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள படம் இட்லி கடை. இது தனுஷ் டைரக்ட் செய்திருக்கும் 4வது படமாகும். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஏற்கனவே தனுஷூடன் திருச்சிற்றம்பலம் படத்திலும் நித்யா மேனன் நடித்திருந்தார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி படத்திலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த படம் மாஸ் வெற்றியை கொடுத்துள்ளதால் நித்யா மேனனுக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் குவிகின்றன.

- Advertisement -

நடிகர் தனுஷூடன் 2வது முறையாக நித்யா மேனன் ஜோடி சேர்ந்துள்ள இட்லி கடை படத்தில் பார்த்திபன் ராஜ்கிரண் சத்யராஜ் அருண்விஜய் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் தெலுங்கில் இந்த படம் வரவேற்பை பெற்றது. அதே போல் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் தோல்வியடைந்தது. அதனால் இட்லி கடை படம் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் 13ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் இப்போது அந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் அது நடப்பது குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படாலும் உள்ளது.

வருகிற செப்டம்பர் 13ம் தேதி இசைஞானி இளையராஜாவின் வேலியண்ட் சிம்பொனி இசை அரங்கேற்றம் நடத்தப்பட உள்ளது. அந்த நாளில் தனது குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினால், இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ், அது இசைஞானிக்கு செய்யும் அவமரியாதை போல் ஆகிவிடும் என்று கருதி, இட்லி கடை ஆடியோ ரிலீஸ் விழாவை ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்