- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... கார்த்தியின் மார்ஷல் திரைப்படத்தில் மலையாள திரை உலகின் அந்த முன்னணி நட்சத்திரம் நடிக்கிறாரா... அடி...

என்னது… கார்த்தியின் மார்ஷல் திரைப்படத்தில் மலையாள திரை உலகின் அந்த முன்னணி நட்சத்திரம் நடிக்கிறாரா… அடி போளி… அசத்தல் சம்பவம் ரெடி…

- Advertisement -

கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் வெளியானது. 96 திரைப்படத்தின் மூலம் பலரது மனதையும் கவர்ந்திருந்த பிரேம்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். முதல் திரைப்படத்தில் காதலின் உன்னதத்தை கூறியிருந்த இயக்குனர் இந்த முறை குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாக சொல்லியிருந்தார்.

கார்த்திக்கு சமமான கதாபாத்திரத்தை அரவிந்த்சாமிக்கும் கொடுத்திருந்தார் பிரேம்குமார். இந்த திரைப்படம் அந்த சமயத்தில் பெரிய அளவு பேசப்படவில்லை என்றாலும் இணையத்தில் வந்த போது கொண்டாடப்பட்டது. பலரும் மெய்யழகன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருப்பதாக வாழ்த்தினார்கள். சொல்லப்போனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுவிட்டது என்றே கூறலாம்.

இதனைத் தொடர்ந்து சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்து இருக்கிறார் கார்த்தி. ஏற்கனவே இதன் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது உருவாகி இருக்கும் இரண்டாம் பாகத்தில் வில்லனாக வருகிறார் எஸ் ஜே சூர்யா. இதன் கிளிப்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்த நிலையில், வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதன் நடுவே, வா வாத்தியாரே திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் கார்த்தி. சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி இதனை இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க மசாலா திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் முடிவு பெற்று விட்டதா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இப்படியான சூழலில் கார்த்தி தற்போது மார்ஷல் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விக்ரம் பிரபுவை கொடுத்து டானாக்காரன் என்னும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த தமிழ்தான் இதனை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க கடலோரம் சார்ந்த கதையாகவும் கேங்ஸ்டர் ஃபிலிம் ஆகவும் இது எடுக்கப்படுகிறது. சென்னையில் இதன் சூட்டிங் தொடங்கி இருக்கிறது.

அடுத்ததாக ராமேஸ்வரத்திலும் சில காட்சிகளை கன்னியாகுமரியிலும் எடுக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பது பலருக்கு தெரியும். அதேசமயம் நிவின் பாலிக்கும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். நிவின் பாலிக்கு தமிழ் சினிமாவில் ரசிகர் பட்டாளம் இருப்பதால், மார்ஷல் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது.

சற்று முன்