- Advertisement -
Homeபொழுதுபோக்குகைதி 2 திரைப்படத்தில், லியோவின் அந்த கேரக்டர் வருவது உறுதியாகி போச்சா... கொளுத்தி போட்ட இணையவாசிகள்...

கைதி 2 திரைப்படத்தில், லியோவின் அந்த கேரக்டர் வருவது உறுதியாகி போச்சா… கொளுத்தி போட்ட இணையவாசிகள்…

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டையுமே இயக்குனர் சொதப்பிவிட்டதாகவும், விறுவிறுப்பான காட்சிகளும் லோகேஷுக்கே உண்டான ஆக்சன் சீன்களும் அந்த அளவுக்கு இல்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முந்தைய திரைப்படமான லியோவிலும் இரண்டாம் பாதி சரியில்லை என்ற விமர்சனத்தை தான் பலரும் முன் வைத்தனர். படம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க எதற்கு தேவையே இல்லாமல் நரபலி என்ற கான்செப்ட் வந்தது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களுக்கு பிறகு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ், இரண்டாம் பாதி சரி வர அமையாதது தனது தவறுதான் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மாநகரம் கைதி என மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த அவர், மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்பட வெற்றிகள் மூலம் இந்திய அளவில் பேசப்பட்டார். ஆனால் கடைசியாக வெளிவந்த அவரது இரண்டு திரைப்படங்களுமே, வசூல் ரீதியாக வரவேற்பு பெற்றாலும் லோகேஷ் கனகராஜுக்கு சற்று பின்னடைவையே கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் அவர் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ராக்கி சாணி காகிதம் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இதனை எடுக்க உள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக எடுக்கப்படும் இதில் கதாநாயகனாக வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்திற்காக அவர் தனது உடல் எடையையும் குறைத்து இருக்கிறார்.

- Advertisement -

இதனை முடித்த கையோடு அவர் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். எல் சி யு கான்செப்ட் மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக்கப்பட இருக்கிறது. வரும் டிசம்பர் மாத இறுதியில் இதற்கான படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.

இப்படியான சூழலில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ திரைப்படத்தில் விஜயின் சித்தப்பாவாக ஹரால்டு தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் வருவார் அர்ஜுன். இருந்தாலும் அந்த கேரக்டரை சரியாக பயன்படுத்தவில்லை என்றே பலரும் கூறி வந்தனர். இப்படியான சூழலில் தான் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் டெரராக இருக்கும் என்று பேசி வருகிறார்கள். அண்மையில் அர்ஜுனுடன் லோகேஷ் கனகராஜ் எடுத்த புகைப்படம் வைரலான நிலையில், இப்படி ஒரு தகவல் கோலிவுட்டில் சுற்றி வருகிறது.

- Advertisement -

சற்று முன்