- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 தேசிய விருதுகள் உள்பட 55 விருதுகள்… 12 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 210 கோடிகளை...

2 தேசிய விருதுகள் உள்பட 55 விருதுகள்… 12 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 210 கோடிகளை வசூலித்த படம் – 11 ரூபாய் சம்பளத்தில் நடித்த பிரபல நடிகரின் மகள்!

- Advertisement -

சினிமா என்பதே கனவு தொழிற்சாலைதான். கற்பனையாக உருவாகும் கதைகள்தான் திரையில் படங்களாக உயிர் பெறுகின்றன. சினிமாவை பொருத்தவரை கற்பனை கதைகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை இருந்தாலும் அதில் காட்சிகள் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில கற்பனையாக காட்சிகளையும் சேர்த்துக் கொள்வது வழக்கம்தான்.

அந்த வகையில் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு படம் பாக் மில்கா பாக். இந்த பாக் மில்கா பாக், படத்தின் பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்து இருந்தாலும் இன்று வரை ரசிகர்களால் பேசப்படும் ஒரு படமாகவும் பாக் மில்கா பாக் படம் இருக்கிறது.

- Advertisement -

பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான பாக் மில்கா பாக் என்ற படத்தில் கதாநாயகனாக ஃபர்ஹான் அக்தர் நடித்தார். இந்த படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா டைரக்ட் செய்திருந்தார் புகழ்பெற்ற இந்திய ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம். படத்தின் மொத்த பட்ஜெட் 41 கோடி ரூபாய்.

ஆனால் பாக் மில்கா பாக் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 210 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. அந்த காலகட்டத்தில் குறைந்த பட்ஜெட்டில் மிக அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமையும் பாக் மில்கா பாக் படத்துக்கு கிடைத்தது. வசூலில் மட்டுமின்றி விருதுகள் பெறுவதிலும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. 2 தேசிய விருதுகள் 6 பிலிம்பேர் விருதுகள் உட்பட மொத்தம் 55 விருதுகளை இந்த படம் வென்றது.

- Advertisement -

பாக் மில்கா பாக் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் ஃபர்ஹான் அக்தருக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. மேலும் 2 தேசிய விருதுகளையும் உலக அளவில் 14 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகளையும் இந்தப் படம் வென்றது. ஒட்டுமொத்தமாக இந்திய சினிமாவுக்கே இந்த படம் மிகப்பெரிய அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் பிரபல நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் ஒரு கேமியோ கேரக்டரில் நடித்து அனைவரும் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் பாக் மில்கா பாக் படத்தில் நடித்த நடிகை சோனம் கபூருக்கு 11 ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்பட்டது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா கூறியதாவது, சோனம் கபூரும் ஃபர்ஹான் அக்தரும் எப்படியாவது இந்த படத்தில் நடிக்க ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 11 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொண்டு சோனம் கபூர் இந்த படத்தில் நடித்தார். ஃபர்ஹான் அக்தர் பொறுத்தவரை தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று அவர் கேட்கவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்