- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் - வாழ்த்துகளை தெரிவித்து கடும் விமர்சனத்தில் சிக்கிய தவெக...

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் – வாழ்த்துகளை தெரிவித்து கடும் விமர்சனத்தில் சிக்கிய தவெக தலைவர் விஜய்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கடந்த 1980 90களில் ஜொலித்தவர் நடிகர் விஜயகாந்த். முதலில் புரட்சிக்கலைஞர் என அழைக்கப்பட்ட அவர் பின்னாளில் கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். சினிமாவில் நல்ல நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்த அவர், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த 2005ம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய அவர், அரசியலிலும் பெரிய வரவேற்பை பெற்றார். அவரது கட்சி சந்தித்த 2வது சட்டசபை தேர்தலிலேயே திமுகவை ஓரம்கட்டி எதிர்கட்சித் தலைவராக அதிமுக ஆட்சியில் அமர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் 6 ஆண்டுகளுக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், 2023ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மறைந்தார்.

- Advertisement -

இப்போது தேமுதிக கட்சியை அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்கே சுதீஷ் மற்றும் மூத்த மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தி வருகின்றனர். நேற்று ஆகஸ்ட் 25ம் தேதி கேப்டன் விஜயகாந்த் பிறந்த தினத்தில் அவரது ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் புகழஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த 22ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் விஜய், கடந்த வாரத்தில் மதுரையில் நடந்த தவெக மாநாட்டில், மதுரை என்றாலே எனக்கு என்னுடைய அண்ணன் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தான் நினைவு வருவார். அவரும் இந்த மதுரை மண்ணில் பிறந்தவர்தான் அவரை என்னால் மறக்க முடியுமா என்று பேசியிருந்தார்.

- Advertisement -

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி, நேற்று தவெக தலைவர் நடிகர் விஜய் மாலை 4 மணிக்கு மேல், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டு இருக்கிறார். அதுவும் மாலை 4 மணிக்கு மேல் அவர் இந்த பதிவை செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

மேலும் அவர் செய்த இந்த பதிவும் இப்போது விமர்சனத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து கமெண்ட் செய்து வரும் பலரும், இறந்தவருக்கு யாரும் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல மாட்டார்கள். பிறந்த நாளில் நினைவுதான் கூறுவார்கள். அல்லது புகழஞ்சலி செலுத்துவார்கள். இதுகூட நடிகர் விஜய்க்கு தெரியாதா? இறந்தவருக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறாரே என்று பலரும் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்