- Advertisement -
Homeபொழுதுபோக்குமாலை 6 மணிக்கு மேல் நடிகர் விஜய் நடிக்க மாட்டார், வீட்டை விட்டு வெளியே வர...

மாலை 6 மணிக்கு மேல் நடிகர் விஜய் நடிக்க மாட்டார், வீட்டை விட்டு வெளியே வர மாட்டார் – வைரலாகும் கடும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி தந்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவர் மீது பலவிதமான கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் அவர் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார், ஷூட்டிங்கிலும் நடிக்க மாட்டார். கட்சி கூட்டத்திற்கும் வரமாட்டார் என்று விஜய் குறித்து கிண்டலாக பேசப்படுகிறது. இதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் இதுகுறித்து கூறியதாவது, அவரவர்களுக்கான கம்பர்ட்பிள் என்று ஒன்று இருக்கும். நடிகை நயன்தாரா ஷூட்டிங்குக்கு பகல் 12 மணிக்குதான் வருகிறார். 9 மணி ஷூட்டிங்குக்கு 12 மணிக்கு வருகிறார். யாராவது கேட்க முடியுமா? ஒவ்வொருத்தரும் அதுபோல ஒரு கம்பர்ட்டபிள் இருக்கிறது.

- Advertisement -

அவரவர் சௌகரியம் போல இருந்துக்கொள்ளலாம் என்ற உரிமை இருக்கிறது.
அதை ஏற்றுக்கொண்டுதான் அவர்களை படத்தில் நடிக்க புக் செய்கிறார்கள். 6 மணிக்கு மேல் நடிகர் விஜய் இருக்க மாட்டார் இருக்க மாட்டார் என்று எதை மென்சன் செய்து சொல்கிறார்கள் என்றால், எனக்கு தெரிந்த வரை தெளிவாக புரிகிறது.

மாலை 6 மணிக்கு மேல் அவர் தண்ணியடிக்க போய்விடுவார் என்பதுதான் அவர்கள் சொல்ல வர்றது. ஏன் அந்த தண்ணிய அவர் கேரவன்ல வெச்சு அடித்தால் ஆவாதா? தண்ணீ அடிக்க வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் குடிக்கலாம். இதுக்காக வீட்டுக்கு தான் போய்தான் அடிக்க வேண்டுமா என்ன? அப்படி இல்லை. இதை ஒன்றும் பெரிதாக அப்படி மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

- Advertisement -

சினிமாவில் வந்து நிறைய பேர் குடிக்கிறாங்க. அதை ரொம்ப ஹேப்பியா வேற பண்றாங்க. நான் குடிக்கலே என்று பெருமையாக பேசின ஒரு காலம் இருந்தது. இப்ப எல்லாம் அப்படி கிடையாது. ஆல்மோஸ்ட் 99 சதவீதம் பேரை குடிகாரனாக மாற்றிவிட்டது இந்த கவர்மென்ட்டு. கடந்த பல ஆண்டுகளாக எல்லார் வீட்டுலேயும் இந்த தாய்ப்பால் கொடுக்கற மாதிரி கொடுத்து குடிகார கும்பலாக தமிழ்நாட்டையே மாற்றிவிட்டது.

அப்படி இருக்கும் போது இவருக்கு குடிப்பழக்கம் இருக்குதுன்னு அது உண்மையா பொய்யா என்பது அப்பாற்பட்ட விஷயம். அப்படி பேசறவருக்கும் தெரியாது. ஒருத்தர் மீது பழி சுமத்துவதற்காக சொல்றது தானே? எனக்கு தெரிஞ்சு அவர் நீண்ட காலமா இன்னிக்கு நேத்து இல்லே, அவங்க அப்பா படம் எடுத்த காலத்தில் இருந்து அவர் 6 மணிக்கு மேல நடிச்சது இல்லே. அது அவரோட கம்பர்ட்டபிள் என்று அந்த நேர்காணலில் அந்தணன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்