நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வெளியான முதல் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். அவரே ஹீரோயினாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், வனிதாவுக்கு ஜோடியாக நாயகனாக நடித்திருந்தார். அடல்ட் கண்டென்ட் காட்சிகள் நிறைந்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் போதிய ஆதரவின்றி பிளாப் ஆனதுஅடைந்தது. படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளும், வசனங்களும் ரசிகர்கள் முகம் சுளிக்கும்படியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் ராத்திரி சிவராத்திரி என்ற இளையராஜா பாடலையும் டைரக்டர் வனிதா விஜயகுமார் பயன்படுத்தி இருந்தார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் ரூபிணி ஆடிப் பாடிய ஒரு பாடல் காட்சி அது. இதற்கு இளையராஜா தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில், நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டியவ என்று கூறி வனிதா விஜயகுமார் புயலை கிளப்பியதும் ரசிகர்களால் மறக்க முடியாதது.
மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தான் தயாரித்திருந்தார். இது தயாரிப்பாளராக ஜோவிகா தயாரித்த முதல் படம். அதே போல் வனிதா விஜயகுமாரும் இந்த படம் மூலமாக தான் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் முதல் முயற்சியிலேயே அம்மா மகள் இருவருமே பலத்த தோல்வியை சந்தித்து விட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை வனிதா விஜயகுமார் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறியதாவது,
இந்த படத்தில் நானும் ராபர்ட் மாஸ்டரும் திருமணம் செய்து கொள்ளும் ஒரு காட்சி இருந்தது. அந்த காட்சியில் ராபர்ட் மாஸ்டர் எனக்கு தாலி கட்டும் ஷாட் மட்டும் 30 முதல் 40 டேக்குகள் வரை திரும்ப திரும்ப எடுக்கப்பட்டது. பலமுறை முயற்சித்தும் அந்த காட்சி சரியாக வரவில்லை. அப்போது ராபர்ட் மாஸ்டரின் கைகள் நடுங்கியதால் திரும்ப திரும்ப அந்த டேக்கை எடுக்க வேண்டியிருந்தது.
தாலி கட்டும் காட்சி இப்படியே இழுத்துக்கொண்டே போனதால் ஒரு கட்டத்தில் எனக்கே போதும் போதும் என்றாகி விட்டது. நானே சோர்வடைந்து விட்டேன். தயவுசெய்து சீக்கிரம் எடுத்த முடிக்க வேண்டும் என்று ராபர்ட் மாஸ்டரிடம் வலியுறுத்தி சொன்னேன். அதன்பிறகுதான் அந்த காட்சி ஒருவழியாக ஓகே ஆனது. 30 முதல் 40 டேக் வரை அந்த காட்சி எடுக்கப்பட்டதால் நான் டென்சன் ஆகி விட்டேன் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
வனிதா விஜயகுமார் எப்பவுமே சர்ச்சையான ஒரு பெண்ணாக இருந்து வருகிறார். ஏற்கனவே 3 திருமணங்கள் செய்து அடுத்தடுத்து கணவர்களையும் விவகாரத்து செய்தவர். அதனால் படப்பிடிப்பில் ராபர்ட் மாஸ்டர் தாலி கட்டும் காட்சியில் 30 முதல் 40 டேக் வரை போக காரணம், இது உண்மையாகி விடுமோ என்று அவர் மனதளவில் அச்சப்பட்டு இருப்பார். அந்த பீதியில்தான் அந்த காட்சியில் அவர் சொதப்பி இருப்பார் என்று ரசிகர்கள் பலரும் நடிகை வனிதா விஜயகுமாரை கலாய்த்து வருகின்றனர்.





