மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வரும் பெரும்பாலான நடிகைகள் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விடுகின்றனர். அந்த காலத்தில் அம்பிகா ராதா ஊர்வசி ரேவதி தொடங்கி இப்போதைய லட்சுமி மேனன் கீர்த்தி சுரேஷ் நித்யாமேனன் வரை மலையாள நடிகைகளுக்கு தமிழில் நல்ல பேராதரவு கிடைத்து வருகிறது.
குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். விஜய்க்கு ஜோடியாக பைரவா சர்கார் படங்களில் நடித்தார். மேலும் சியான் விக்ரம் சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் என முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் கோவாவில் கோலாகலமாக நடந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக கதாநாயகியை மையப்படுத்திய முக்கிய கேரக்டர் கொண்ட படங்களில் அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
அப்படிப்பட்ட கதைகளையும் தேர்வு செய்து கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா என்ற படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ஆனால் இந்த படம் நேற்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ட்ரம் ஸ்டிக் நிறுவனத்தின் சார்பில் கீர்த்தி சுரேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன
ஏற்கனவே இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் மற்றும் பிசாசு 2 என்ற 2 படங்களும் ரிலீஸூக்கு தயாராக உள்ள நிலையில் அந்த படங்களின் டிஜிட்டல் ரைட்ஸ் இன்னும் விற்பனையாகாமல் உள்ளது. அதனால் அந்த படங்கள் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது இதற்கிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





