- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே... இட்லி கடையில் இவர் நடித்திருக்கிறாரா... போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்திய படக்குழு...

ஏதே… இட்லி கடையில் இவர் நடித்திருக்கிறாரா… போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்திய படக்குழு…

- Advertisement -

தனுஷ் இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக உருவாகி இருக்கிறது இட்லி கடை. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்கம் மட்டுமன்றி இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இட்லி கடைக்கு தனுஷின் ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இதுபோக ராஜ்கிரண், ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பார்த்திபன் படத்தில் கேமியோ ரோலில் வருகிறார். இதுகுறித்து அவரே இணையத்தில் பதிவிட்டு இருந்தார். தனக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கியதற்கு நன்றி என்று தனுஷை அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இட்லி கடை திரைப்படத்தின் எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணம் அதில், அருண் விஜய் நடித்திருப்பதுதான். குத்துச்சண்டை வீரராக அவர் வருவது படத்தின் போஸ்டர் வெளியாகும் போது தெரியவந்தது. அந்தப் புகைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் இருக்க, அவருக்கு உதவியாளராக தனுஷ் இருப்பது போன்று காட்சி இருந்தது. அப்போதே இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்று விட்டன. படத்தில் தனுஷின் தங்கையாக ஷாலினி பாண்டே நடித்திருப்பதாக சொல்கிறார்கள். ஷாலினி பாண்டேவுக்கு ஜோடியாக அருண் விஜய் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் படத்தின் ஒரு சில போஸ்டர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தை பிரதிபலிப்பது போன்று இருந்தன.

கடந்த ஏப்ரல் மாதமே இட்லி கடை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி இட்லி கடை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்கான பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டு வருகிறார்கள்.

அதன்படி முதல் போஸ்டரில், அஸ்வின் என்னும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக சத்யராஜ் படத்தில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அவருக்கு விஷ்ணுவர்தன் எனும் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இப்படி அடுத்தடுத்து வெளியாகும் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது.

சற்று முன்