- Advertisement -
Homeபொழுதுபோக்குபோலீஸ் அனுமதி மறுத்தும் பிரிமியர் ஷோவுக்கு வந்தவர் அல்லு அர்ஜூன், பெண் உயிரிழக்க அவர்தான் காரணம்...

போலீஸ் அனுமதி மறுத்தும் பிரிமியர் ஷோவுக்கு வந்தவர் அல்லு அர்ஜூன், பெண் உயிரிழக்க அவர்தான் காரணம் – தெலங்கானா முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு!

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் புஷ்பா. இதுவரை 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த படம் வெளியாக ஒரு நாள் முன்பே 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் பிரிமியர் ஷோ நடத்தப்பட்டது.

இந்த பிரிமியர் ஷோவில் தனது படக்குழுவினருடன் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் கலந்துக்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது குடும்பத்து ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக அல்லு அர்ஜூன் அறிவித்த நிலையிலும், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பிறகு அல்லு அர்ஜூன் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில், புஷ்பா 2 விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது நடவடிக்கை குறித்து சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது, புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்காக அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வருவதாக கூறி கடந்த டிசம்பர் 2ம் தேதி போலீசில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி போலீசார் அந்த மனுவை நிராகரித்தனர்.

ஆனால் போலீஸ் தரப்பில் அனுமதி மறுத்த பிறகும் நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வந்தார். அவர் வரும்போது காரின் மேற்பரப்பில் உள்ள ஜன்னலை திறந்து வைத்து அதன் வழியே நின்றவாறு ரோடு ஷோ நடத்தினார். இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த தகவல் தெரிந்ததும் தியேட்டரை விட்டு உடனே அவர் வெளியேறவில்லை. போலீசார் தான் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதுபோல் கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது. நான் முதல்வராக இருக்கும் வரை இனி தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜூன் கூறுகையில், முதல்வரின் குற்றச்சாட்டுகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தியேட்டருக்கு செல்லும்போது நான் எந்த ரோடு ஷோவும் நடக்கவில்லை. வாகனத்தில் இருந்தபடியே ரசிகர்களை பார்த்து கையை தான் அசைத்தேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்