- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளி பொங்கல் எல்லாம் தாண்டி போய்விட்டதே… இதில் சூர்யா படத்துக்கு சூர்யா படமே சிக்கலாகி விட்டதா?...

தீபாவளி பொங்கல் எல்லாம் தாண்டி போய்விட்டதே… இதில் சூர்யா படத்துக்கு சூர்யா படமே சிக்கலாகி விட்டதா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ரெட்ரோ. இந்த படம் கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. தியேட்டரிக்கல் மற்றும் நான் தியேட்டரிக்கல் எனப்படும் டிஜிட்டல் உரிமம் சாட்டிலைட் உரிமம் ஆடியோ உரிமம் ஓவர்சீஸ் போன்றவற்றால் இந்த படம் மொத்தமாக ரூ. 235 கோடி வசூலித்தது. அதனால் இது அதிக லாபம் தந்த வணிக ரீதியான வெற்றிப் படம்தான் என்று சக்சஸ் மீட் கொண்டாடினர்.

ஆனால் ரெட்ரோ படம் பெரிய அளவில் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் வணிக ரீதியான வெற்றி என்று எப்படியோ ஒப்பேற்றி விட்டனர். இதைத் தொடர்ந்து சூர்யா நடித்த 45வது படம் கருப்பு ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

- Advertisement -

இதற்கு அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மலைாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது அவரது 47வது படமாகும். இப்படி தொடர்ந்து 3 படங்கள் உள்ள நிலையில் கருப்பு படம் ரிலீஸ் செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

வருகிற தீபாவளிக்கே கருப்பு ரிலீஸ் ஆக வேண்டியதுதான். ஆனால் டிஜிட்டல் வியாபாரமின்றி அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் விஜய் நடித்த ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படங்கள் வருவதால் இடையில் கருப்பு வந்தால் பெரிய வரவேற்பு இருக்காது என கருதி தவிர்த்து விட்டனர்.

- Advertisement -

அதனால் வருகிற தமிழ் புத்தாண்டுக்கு ஏப்ரல் 14ம் தேதி கருப்பு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 46வது படத்தை, வருகிற மே 1ம் தேதி வெளியிட அந்த பட நிறுவனமும் படக்குழுவும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டது.

கருப்பு படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியானால் அடுத்த 2 வாரங்களில் சூர்யா 46 படமும் வெளியாகும். ஒருவேளை கருப்பு படம் சரியாக போகவில்லை, வரவேற்பை பெறவில்லை என்றால் அடுத்த 2 வாரங்களில் வெளியாகும் சூர்யா 46 படத்தையும் அந்த தோல்வி கடுமையாக பாதிக்கும். அதனால் கருப்பு படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டால், சூர்யா 46 படத்தை இன்னும் சில வாரங்கள் தள்ளிப் போட வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் சூர்யா படமே சூர்யா படத்துக்கு சிக்கலை தருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்