- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டர் யார்? கமலுக்கு ஓகே, ரஜினி தரப்பில் நோ… என்னப்பா ஆரம்பமே இப்படி சிக்கலா...

டைரக்டர் யார்? கமலுக்கு ஓகே, ரஜினி தரப்பில் நோ… என்னப்பா ஆரம்பமே இப்படி சிக்கலா இருக்குதே… ஒருவேளை ஜெயிலர்தான் ஜெயிப்பாரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றனர். கடந்த 1970களில் பல படங்களில் ரஜினி கமல் ஒன்றாக நடித்திருக்கின்றனர். 1979ம் ஆண்டில் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு பிறகு இருவரும் 46 ஆண்டுகளாக இணைந்து மீண்டும் நடிக்கவில்லை.

நாம் இருவரும் இணைந்து நடிக்கும் படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. நிறைய லாபமும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் சரியான சம்பளம் நமக்கு கிடைப்பதில்லை. அதனால் தனித்தனியாக நடித்தால்தான் நமது சம்பளமும் உயரும், தனிப்பட்ட வளர்ச்சியும் இருக்கும் என்று ரஜினியும் கமலும் அப்போதே கலந்து பேசி முடிவு செய்தனர்.

- Advertisement -

அதனால்தான் இருவரும் கடந்த 46 ஆண்டுகளாக இணைந்து நடிக்கவில்லை. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் இருவரும் இணைந்து நடிப்பது எப்போது என பல ஆண்டுகளாக கேட்டு வரும் நிலையில், இப்போது ரசிகர்களின் அந்த ஆசையை நிறைவேற்ற ரஜினியும் கமலும் முன்வந்திருக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் முவீஸ் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.

ஆனால் இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இன்னும் டைரக்டர் கதை மற்றும் கேரக்டர் முடிவாகவில்லை என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போவதாக தகவல் பரவிய நிலையில் இதன்மூலம் ரஜினிகாந்த் அதை மறுத்திருக்கிறார்.

- Advertisement -

ரஜினி நினைத்திருந்தால் டைரக்டர் கதை இன்னும் முடிவாகவில்லை என்பதை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். கமலும் நானும் இணைந்து நடிக்கிறோம். இந்த நிறுவனங்கள் தயாரிக்கிறது என்பதை மட்டும் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்பதை இரண்டு முறை அழுத்தமாக அவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

விக்ரம் படத்தை பெரிய வெற்றிப்படமாக கொடுத்த தனது தீவிர ரசிகர் என்ற முறையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலுக்கு ஓகே தான். ஆனால் கூலி படத்தை சொதப்பியதால் ரஜினி தரப்பில் லோகேஷூக்கு கண்டிப்பாக நோ தான். அதே நேரத்தில் ஜெயிலர் 2 மாஸ் ஹிட் ஆகிவிட்டால் நெல்சன்தான் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குவார். அதில் ரஜினி கண்டிப்பாக உறுதியாக இருப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்