- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கு, குழந்தை யார்வசம் இருப்பது? நீதிபதி கேள்வி...

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கு, குழந்தை யார்வசம் இருப்பது? நீதிபதி கேள்வி – வரும் அக்டோபர் 30ம் தேதி தீர்ப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜீவி பிரகாஷ்குமார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய வெயில் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ் குமார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து நட்சத்திர இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் மாறினார்.

வருகிற அக்டோபர் 1ம் தேதி தனுஷ் நடித்த இட்லி கடை படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார்தான். நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த 79வது தேசிய விருது வழங்கும் விழாவில் வாத்தி படத்தில் இசையமைத்த ஜீவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது வழங்கப்பட்டது. 2வது முறையாக தேசிய விருதை ஜீவி பிரகாஷ் குமார் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் உள்ளார். ஒரு கட்டத்தில் திரைப்பட நடிகராகவும் ஜீவி பிரகாஷ் குமார் மாறி பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் நடித்த நாச்சியார் ஜெயில் குப்பத்து ராஜா டார்லிங் போன்ற பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இதுவரை 25 படங்களுக்கு மேல் ஜீவி பிரகாஷ்குமார் நடித்திருக்கிறார். இப்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மென்டல் மனதில் என்ற படத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடித்து வருகிறார். நடிப்பு இசை என பிஸியாக இருக்கும் அவர் தொடர்ந்து வெளிநாடுகளில் இசை கச்சேரிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து ஜீவி பிரகாஷ் குமார் திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜீவி பிரகாஷ்குமார் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் விவாகரத்து கேட்டு சென்னையில் உள்ள குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது.

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர். மனம் ஒத்து பிரிவதில் இருவரும் உறுதியாக உள்ளனர். தங்களது மகளை சைந்தவி வளர்ப்பதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று ஜீவி பிரகாஷ் நீதிபதியிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீதான தீர்ப்பு வருகிற அக்டோபர் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை அக்டோபர் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனால் அன்றைய தினம் இருவருக்கும் சட்டப்படியாக விவாகரத்து கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்