- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவ்வளவுதா… நம்மள சோலியை முடிச்சுட்டுட்டீங்க போங்க… முக்கிய முடிவுக்கு வந்த ஓடிடி நிறுவனங்கள்...

அவ்வளவுதா… நம்மள சோலியை முடிச்சுட்டுட்டீங்க போங்க… முக்கிய முடிவுக்கு வந்த ஓடிடி நிறுவனங்கள் – வெலவெலத்துப் போன படத்தயாரிப்பார்கள்!

- Advertisement -

இன்றைய சினிமாத்துறையில் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான லாபத்தை அள்ளித் தருவது வருவாயை கொட்டிக் கொடுப்பது ஓடிடி நிறுவனங்களும் சேட்டிலைட் நிறுவனங்களும்தான். ஒரு தயாரிப்பாளர் தனது படத்தின் தயாரிப்பில் மொத்த பட்ஜெட்டில் 60 சதவீதம் வரை நான் – தியேட்டரிக்கல் எனப்படும் டிஜிட்டல் ரைட்ஸ், சேட்டிலைட் ரைட்ஸ் மற்றும் ஆடியோ ரைட்ஸ் வியாபாரம் மூலமாகவே பெற்று வருகிறார்.

அதனால் தியேட்டர்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட டிஜிட்டல் ரைட்ஸ் சேட்டிலைட் ரைட்ஸ் ஆடியோ ரைட்ஸ் மூலமாகவே கணிசமான லாபத்தை தயாரிப்பாளர்கள் அடைகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கோடிகளில் பணத்தை அள்ளிக் கொடுத்து படங்களை வாங்கிய ஓடிடி நிறுவனங்கள் பலத்த நஷ்டங்களை சந்தித்தன.

- Advertisement -

குறிப்பாக தர்பார் இந்தியன் 2 தக்லைஃப் கங்குவா குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களை நூற்றுக்கணக்கான கோடிகள் கொடுத்து வாங்கிய முன்னணி ஓடிடி நிறுவனங்கள் பல நூறு கோடிகள் வரை நஷ்டத்தை சந்தித்தன. அதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இப்போது புதிய படங்களை வாங்காமல் ஓடிடி நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. அல்லது மிக குறைந்த விலைக்கு படங்களை ஓடிடி நிறுவனங்கள் கேட்கின்றன. அதனால் ரிலீஸூக்கு தயாரான பல படங்கள் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் கூட டிஜிட்டல் வியாபாரம் ஆகாமல் தான் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது. இதற்கிடையே அமேசான் பிரைம் நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளன. அதாவது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அந்த படத்தை விலை கொடுத்து இனி வாங்குவதில்லை. படம் ரிலீஸ் ஆன பிறகு எவ்வளவு வசூலிக்கிறதோ அதை பொறுத்து விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்துள்ளன.

- Advertisement -

அதாவது படத்தின் வசூல் 100 கோடி என்றால் அதில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே விலை போட்டு தருவார்கள். இதுவரை ஒரு தயாரிப்பாளருக்கு அவர் படம் தயாரித்த பட்ஜெட்டில் 60 சதவீதம் வரை ஓடிடி சாட்டிலைட் ஆடியோ ரைட்ஸ் மூலமாகவே வியாபாரத்தில் கிடைத்துவிடும். ஆனால் தற்போது ஓடிடி நிறுவனங்கள் எடுத்துள்ள இந்த புதிய முடிவால் 30 சதவீதம் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதனால் சொந்த பணத்தை போட்டு படம் எடுக்காமல் பைனான்ஸ் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இனிமேல் சினிமாவே தயாரிக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இனி தயாரிப்பாளர்கள் இந்த பிரச்னையை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது பெரிய சிக்கலாக உள்ளது. இதில் அடுத்தகட்டமாக ஓடிடி நிறுவனங்கள் எடுத்துள்ள அதே முடிவை இனி தொலைக்காட்சி நிறுவனங்களும் சேட்டிலைட் உரிமம் தருவதில் பின்பற்றும் முடிவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்