- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்திலிருந்து விலகிய மிக முக்கியமான நடிகர்... என்னங்க கடைசில இப்படி ஆகிப்போச்சு...

கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்திலிருந்து விலகிய மிக முக்கியமான நடிகர்… என்னங்க கடைசில இப்படி ஆகிப்போச்சு…

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த ஆண்டு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. 2023-ல் அவர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இது போக தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கினார்.

இது போக தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் சிம்புவின் படங்களை அவர் தயாரித்து வருகிறார். தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கும் கமல்ஹாசன் கமிட்டாகி உள்ளார். புதியதாக, சண்டை பயிற்சி மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.

- Advertisement -

இதனிடையே, அண்மையில் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 35 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்துடன் இணைந்து நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்தார். அதன் பிறகு இந்த இணை இணைந்திருப்பதால் படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மூவிஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இதற்கான சூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. இதில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

சென்னையில் சில நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக ஜெயம் ரவி அண்மையில் கூறியிருந்தார். மணிரத்னம் சார் கேட்டுக் கொண்டதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில், படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தமிழில் நடிப்பதில் துல்கர் சல்மான் ஆர்வம் காட்டி வருகிறார். வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதால், தக் லைப் திரைப்படத்திற்கு அவரால் நீண்ட நாட்கள் கால் சீட் ஒதுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் துல்கர் சல்மான் அதிலிருந்து விலகி இருக்கும் சூழலில், விரைவில் புதிய நடிகர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்