- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படத்துக்கு இப்படி ஒரு புது வில்லங்கமா? ஆனா அவர் பேரை சொன்னா, பிரச்னை காத்தா...

வேட்டையன் படத்துக்கு இப்படி ஒரு புது வில்லங்கமா? ஆனா அவர் பேரை சொன்னா, பிரச்னை காத்தா பறந்துடுமுன்னு சொல்றாங்களே, உண்மையா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார். கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். ராணா டகுபதி வில்லனாக நடித்துள்ளார். ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் மஞ்சுவாரியார், ரித்திகா சிங், ரோகிணி, அபிராமி, துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அதைத்தொடர்ந்து டிரெய்லர் வெளியானது. வேட்டையன் படத்தில் இரண்டு பாடல்களும் வெளியாகி பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வேட்டையன் படத்தில், என்கவுண்டருக்கு ஆதரவான வசனங்கள் இருப்பதால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில், நேற்று அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், வேட்டையன் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மற்றொரு புதிய விவகாரம் தலைதூக்கியுள்ளது. வேட்டையன் படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதே லைகா நிறுவனம்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தர்பார் என்ற ரஜினி படத்தை தயாரித்தது. ஏஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது. அதனால் தர்பார் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்தனர்.

- Advertisement -

இதையடுத்து லைகா நிறுவனத்திடம் அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட போது, அடுத்த ரஜினி படம் தயாரிக்கும் போது தருவதாக கூறி சமாளித்தது. ஆனால் லால் சலாம் படத்தை லைகா புரடக்சனஸ் தயாரித்த போதும், அதில் ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்ததால், வினியோகஸ்தர்கள் பணம் திருப்பிக் கேட்காமல் அமைதியாக விட்டு விட்டனர். அந்த படமும் தோல்வி படமாக போனது.

இப்போது லைகா புரகட்சன்ஸ் தயாரிப்பில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதால், எங்களது பணத்தை கொடுங்கள் என்று மீண்டும் களத்தில் இறங்க தர்பார் படத்தால் நஷ்டமான வினியோகஸ்தர்கள் திட்டமிட்டுள்ளனர். நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கவும் உள்ளனர். ஆனால் வேட்டையன் படத்தை தமிழ்நாடு முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ்தான் வெளியீடு செய்கிறது. துணை முதல்வராக உள்ள உதயநிதி பெயரை சொன்னால், வேட்டையன் படத்துக்கு வினியோகஸ்தர்கள் இடையூறு தராமல் எஸ்கேப் ஆகி விடுவார்கள் என்ற தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்