- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் வெற்றிமாறன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப் போவது அந்த நடிகையா? - இதென்னப்பா புது...

இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப் போவது அந்த நடிகையா? – இதென்னப்பா புது டிவிஸ்ட்டா இருக்குது?

- Advertisement -

தக்லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். விடுதலை 2 படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் டைரக்ட் செய்யும் இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் பிரமோ ஷூட் முடிந்த நிலையில் படப்பிடிப்பு வருகிற 18ம் தேதி துவங்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தை தான் தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருந்தார். அதற்கான ரூ. 20 கோடி வரை முன்பணமாகவே வெற்றிமாறனுக்கு தர வேண்டிய சம்பளத்தை கொடுத்து விட்டார். அதன் காரணமாக தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க வேண்டிய படத்துக்கு பதிலாக சிம்பு நடிக்கும் படத்தை வெற்றிமாறன் டைரக்ட் செய்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 120 கோடி வரை எகிறிய நிலையில் படத்துக்காக பிரமாண்ட செட் போடும் செலவுகளே ஏராளமான கோடி ரூபாய் என்பதால் படத்தை தயாரிக்கும் முடிவில் இருந்து தயாரிப்பாளர் தாணு பின்வாங்கினார். பிறகு செட் போடும் செலவுகளை குறைத்துவிட்டு லைவ் லொக்கேஷன்களில் அதிக காட்சிகளை எடுத்து தயாரிப்பு செலவை குறைக்க வெற்றிமாறன், சிம்பு திட்டமிட்டனர்.

எனினும் இப்போதைய தமிழ் சினிமா சூழ்நிலையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் அதிக பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பதே தயாரிப்பாளர்களுக்கு பெரிய ரிஸ்க் ஆக உள்ளது. பெரிய இயக்குனர்கள் பெரிய நடிகர்கள்கள் என யாருடைய படமாக இருந்தாலும் கதை பிடித்தால் மட்டுமே படம் ஓடுகிறது. கூலி தக்லைஃப் கங்குவா விடாமுயற்சி இட்லி கடை என பல படங்கள் தொடர்ந்து மண்ணை கவ்வி விட்டன.

- Advertisement -

இந்த சூழலில் ரூ. 120 கோடி பட்ஜெட் என்பது பெரிய விஷப்பரீட்சயைாக தான் உள்ளது. எனினும் செலவை முடிந்த வரை குறைத்து எடுக்க முடிவு செய்துள்ள சிம்பு வெற்றிமாறன் தரப்பு வரும் 18ம் தேதி துவங்கும் படப்பிடிப்பில் முதல் கட்டமாக சிம்பு நடிக்கும் ஆக்சன் அதிரடி சண்டை காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளது. ஏனெனில் இன்னும் படத்துக்கு கதாநாயகி முடிவாகாமல் இருந்தது.

ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அவரும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நட்சத்திர நடிகையாக உள்ளார். ஆனால் அவர் நடித்த படம் என்றால் பிஸினஸ் நல்லவிதமாக இருக்கும். அதே நேரத்தில் வெற்றிமாறன் படத்தில் நாயகிகளை மேக்கப் போட விடமாட்டார். பெரியதாக காஸ்ட்யூமும் இருக்காது. அப்படிப்பட்ட வெற்றிமாறனின் படத்தில் அழகு பதுமையான சமந்தாவை எப்படி காட்டப் போகிறார் என்பதுதான் பெரிய சிக்கலான கேள்வியாக ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்