- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் பார்த்து பொறாமைப்பட்ட இயக்குனர் அவர்தான்… இயக்குனர் இமயம் பாரதிராஜா அவரை பற்றி இப்படி சொல்லி...

நான் பார்த்து பொறாமைப்பட்ட இயக்குனர் அவர்தான்… இயக்குனர் இமயம் பாரதிராஜா அவரை பற்றி இப்படி சொல்லி விட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஒரு காலகட்டத்தில் இது மட்டுமே சினிமா என்ற வரையறைக்குள் சிக்கியிருந்த தமிழ் சினிமாவை முதன் முறையாக யதார்த்த கதைக்களமாக மாற்றி அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற பெருமை இந்த படைப்பாளிக்கு மட்டுமே உண்டு.
இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் பெயர் பெற்ற இயக்குனர் கே பாக்யராஜின் குருநாதரும் பாரதிராஜா தான்.

அவரது இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் அலைகள் ஓய்வதில்லை 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் முதல் மரியாதை கிழக்கு சீமையிலே சிவப்பு ரோஜாக்கள் என ஒவ்வொரு படமும் பாரதிராஜா பெயரை சொல்லும். சிறந்த இயக்குனராக மட்டுமின்றி நல்ல குணச்சித்திர நடிகராகவும் தன்னை ரசிகர்களின் மனதில் நிறுத்தியவர். எப்போதும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கலைஞராக பாா்க்கப்படுகிறார்.

இயக்குனர் பாரதிராஜா பங்கேற்ற ஒரு நேர்காணலில் நீங்கள் பார்த்துப் பெருமைப்படும் பொறாமைப்படும் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாரதிராஜா கூறியதாவது, கடந்த 1982ம் வருஷம்ன்னு நினைக்கிறேன். ஒரு இளைஞன் என் ஆபீஸூக்கு நேரில் வந்தார். வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் ரத்னத்தோட பையன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.

அப்போது அந்த இளைஞன் என்கிட்ட ஒரு கதை சொன்னார். நவீனமா, அதே சமயம் ரொம்ப க்ளாஸிக்கலா அந்த கதை இருந்தது. எக்ஸ்ட்ரானரி ஸ்டோரியாக இருந்தது. ஆனால் நானே அப்போது வளரும் இயக்குனர்தான். அதனால அந்தப் படத்தை அப்போ நான் பண்ண முடியாது என்று சொல்லி அவரை திருப்பி அனுப்பி விட்டேன்.

பின்னாடி அந்த இளைஞன் இயக்கிய பகல் நிலவு என்ற படத்தை பார்த்து நான் அசந்து போனேன். அவர்தான் இயக்குனர் மணிரத்னம். அவருடைய மௌன ராகம் நாயகன் படங்கள் அவர் மேல் பெரிய மரியாதையை எனக்கு உண்டாக்கியது. நான் பெருமைப்படும் பொறாமைப்படும் ஒரே இயக்குநர் என்றால் அது மணிரத்னம் மட்டும்தான்.

இந்திய அளவில் சிறந்த 10 இயக்குநர்கள் என்று பட்டியல் போட்டால் அதில் மணிரத்னத்துக்கு முக்கியமான இடம் உண்டு. இந்தியாவில் இருக்கும் உலகத் தரப் படைப்பாளி மை லவ்வப்பிள் டைரக்டர் மணிரத்னம். அவருடைய கடல் படத்தை எல்லாரும் பலவிதமாக விமர்சனம் செஞ்சாங்க. ஆனா கடல் படம் நான் முழுமையாக அங்கீகரிக்கும் படம் என்று பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் இயக்குனர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

சற்று முன்