இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடித்திருக்கிறார். அதே போல் மணிரத்னம் இயக்கத்தில் உயிரே என்ற படத்திலும் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இந்தியில் ஷாருக்கான் நடித்த பதான், ஜவான் போன்ற படங்கள் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்த பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன. இதில் ஜவான் படத்தை இயக்குனர் அட்லி டைரக்ட் செய்திருந்தார். இதில் விஜய் சேதுபதி நயன்தாரா யோகிபாபு பிரியாமணி போன்ற தமிழ் நட்சத்திரங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஷாருக்கான் ஒரு காலகட்டத்தில் மிகவும் அடாவடியான ஒரு பேர்வழியாக இருந்திருக்கிறார். அதனால் அவர் பங்கேற்கும் நேர்காணல்களிலும் சினிமா விழா நிகழ்ச்சிகளிலும் வரம்பு மீறிப் பேசுபவராக இருந்திருக்கிறார். இது அவரது ரசிகர்கள் தரப்பில் காமெடியாக ரசிக்கப்பட்டாலும் சில நேரங்களில் அவரது எக்குத்தப்பான பேச்சு அவரது ரசிகர்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னணி இந்தி நடிகைகளில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தாவிடம் நடிகர் ஷாருக்கான் தாறுமாறாக பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2004ம் ஆண்டில் நடந்த காப்பி வித் கரன் என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஷாருக்கான் கலந்துகொண்டனர். அப்போது, நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் பேசிய நடிகர் ஷாருக்கான், நீ நடிக்கும் படத்தில் நீ கர்ப்பமாக இருக்கிற மாதிரி கேரக்டர் இருந்தால் அதற்காக கவலைப்படாதே. நானே உன்னை கர்ப்பமாக்கி விடுகிறேன் என்று விளையாட்டாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டவுடன் பிரீத்தி ஜிந்தா முகத்தில் பெரிய அதிர்ச்சியை வெளிப்படுத்தினார், எனினும் சுதாரித்துக்கொண்ட அவர் பிறகு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார். இதேபோல் மற்றொரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானிடம் ஒரு இளம் பெண், நீங்கள் தூங்கும்போது குறட்டை விடுவீர்களா என்று ஜாலியான ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், நீ வயதில் கொஞ்சம் பெரியவளாக இருந்திருந்தால் நான் வேற மாதிரி பதில் சொல்லி இருப்பேன் என்று கிண்டலாக கூறியிருந்தார். அதே கேள்வியை ஒரு ஆண் ரசிகர் கேட்டபோது, நீ வந்து என் கூட படுத்து பாரு தெரியும் என்றும் அவர் பதிலளித்து இருக்கிறார். இதுபோல் பல நிகழ்ச்சிகளில் நடிகர் ஷாருக்கான் மிகவும் கொச்சையாக பேசியிருக்கிறார். எதிரில் இருப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் இப்படி நடிகர் ஷாருக்கான் பேசிய வீடியோ காட்சிகளை, இப்போது இணையத்தில் வைரலாக்கிய நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.





