- Advertisement -
Homeபொழுதுபோக்கு30 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் ஷாருக்கான் - கஜோல் ஜோடிக்கு கிடைத்த மரியாதை - காலரை...

30 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் ஷாருக்கான் – கஜோல் ஜோடிக்கு கிடைத்த மரியாதை – காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் பாலிவுட் சினிமா!

- Advertisement -

இந்தியில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் ஷாருக்கான். சமீபத்தில் அவர் நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய 2 படங்களுமே 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன. இதில் ஜவான் படத்தை இயக்குனர் அட்லி டைரக்ட் செய்திருந்தார். இதில் நயன்தாரா விஜய் சேதுபதி பிரியாமணி யோகிபாபு போன்றவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

நடிகர் ஷாருக்கான் தமிழிலும் படங்களில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய உயிரே என்ற படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். அதே போல் கமல்ஹாசனுடன் ஹேராம் என்ற படத்திலும் முக்கியமான ஒரு கேரக்டரில் ஷாருக்கான் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்தியில் பல வெற்றிப் படங்களை தந்த நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டின் நட்சத்திர நாயகனாக இன்றும் வலம் வருகிறார். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பும் ஆதரவும் செல்வாக்கும் இருந்து வருகிறது. இதற்கிடையே லண்டனில் லெஸ்டர் ஸ்கொயர் என்ற புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத்தலம் உள்ளது. இங்கு சீன்ஸ் இன் தி ஸ்கொயர் என்ற பெயரில் பிரபல நட்சத்திர நடிகர்கள் மற்றும் அவர்களது கேரக்டர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் திரைப்பட காட்சிகளும் அந்த சதுக்கத்தில் இடம்பிடித்துள்ளன. மிஸ்டர் பீன் பேட்மேன் ஹாரிபாட்டர் உட்பட பல கதாபாத்திரங்களின் சிலைகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் நடிகை கஜோல் ஆகியோரின் கேரக்டர்களின் வெண்கல சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த 1995ம் ஆண்டில் 4 கோடி ரூபாய் செலவில் தயாரான தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படத்தில் ஷாருக்கான், கஜோல் நாயகன் நாயகியாக நடித்திருந்னர். இந்தப் படம் வெளியாகி ரூ. 102 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் கடந்த 25 ஆண்டுகளாக மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் தினமும் ஒரு காலை காட்சி அல்லது பகல் காட்சியாக திரையிடப்பட்டது.

நடிகர் ஷாருக்கான் கஜோல் நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் இப்போது 30 ஆண்டுகளை தற்போது நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான் – கஜோல் ஜோடியாக நிற்கும் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுவப்பட்ட முதல் இந்திய பட உலோக சிலை இதுதான். இந்த சிலை திறப்பு விழாவில் ஷாருக்கான் கஜோல் ஜோடியாக கலந்துக்கொண்டனர். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்