- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் படத்திலும் அதே பாணியை பின்பற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு - இந்த முறை ஒர்க்...

சிவகார்த்திகேயன் படத்திலும் அதே பாணியை பின்பற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு – இந்த முறை ஒர்க் அவுட் ஆகுமா ப்ரோ என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கப் போவது வெங்கட் பிரபுவா அல்லது சிபி சக்கரவர்த்தியா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்தது. இப்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.

வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் சில தினங்களுக்கு முன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அப்போது அவருடன் வெங்கட் பிரபுவும் இருந்தார். அமெரிக்காவில் உள்ள லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்துக்கு இருவரும் சென்றுள்ளனர். இந்த நிறுவனம்தான் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப நிறுவனமாக கூறப்படுகிறது.

- Advertisement -

இங்கு நவீன தொழில் நுட்பத்தில் உடல் மற்றும் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் ஒரே கதாபாத்திரத்தை பல்வேறு கேரக்டர்களில் வடிவமைத்து மாற்றி காட்டலாம். அதாவது ஒரே முகத்தை வைத்து பல புதிய கேரக்டர்களை உடல் மொழிகளை உருவாக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தில் விஜய் கேரக்டரை உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது அதே தொழில் நுட்பத்தை மீண்டும் பயன்படுத்தி சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் உருவாக்க இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இந்த படமும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் மிகப் பிரமாண்டமாக அமைய வேண்டும் என்று டைரக்டர் வெங்கட் பிரபு முடிவு செய்து இருக்கிறார். இந்த படம் சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் டிராவல் பாணியிலான கதை என்றும் ஏற்கனவே வெங்கட்பிரபு தகவல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தி கோட் படத்தில் அப்பா மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்த விஜயின் மேக்கப் குறித்து விமர்சனம் எழுந்தது. குறிப்பாக விஜய் ஹேர் ஸ்டைல் அப்பா மகன் என 2 கேரக்டர்களுக்குமே சரியாக பொருத்தமாக இல்லை என்று தளபதி ரசிகர்கள் பலரும் வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த முறை நடிகர் சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் விரும்பும் விதமான ஸ்பெஷலான ஹேர் ஸ்டைலில் காட்டுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் தொழில்நுட்பம் என்ற பெயரில் தி கோட் படத்தில் விஜயகாந்தை காட்டி சொதப்பியதை போல இந்த முறை ஏமாற்றி விடாதீர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். தி கோட் படத்தில் ஏமாற்றியதை போல இல்லாமல் இந்த முறை வெங்கட்பிரபு பாணி ஒர்க் அவுட் ஆகுமா என்றும் ரசிகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்