- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக வெற்றிக் கழகத்தில் இப்படியும் ஒரு புகைச்சலா? இதற்கு விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?...

தமிழக வெற்றிக் கழகத்தில் இப்படியும் ஒரு புகைச்சலா? இதற்கு விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தொண்டர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!

- Advertisement -

வருகிற 2026 சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் கட்சிதான். இந்த தேர்தல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி. எல்லா தொகுதிகளிலும் எங்களது கட்சி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள். நாங்கள் ஆட்சியை பிடிக்கப் போவது உறுதி என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தொடர்ந்து பேசி வருகிறார். அவ்வப்போது திமுக குறித்தும் திமுக ஆட்சி குறித்தும் கடும் விமர்சனங்களை விஜய் முன்வைத்து வருகிறார்.

இந்த சூழலில் அவரது தவெக கட்சிக்குள் இப்போது புதிய பிரச்னை ஒன்று முளைத்துள்ளது. அதாவது தவெக கட்சியின் தலைவராக விஜய் பொதுச் செயலாளராக புஸ்லி ஆனந்த் மற்ற பொறுப்புகளில் கட்சி துவங்கும் முன்பு விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த முக்கிய பொறுப்பாளர்களே கட்சியின் மாநில நிர்வாகிகளாக முக்கிய பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு பணி செய்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படிப்பட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா வெளியேறி தவெக கட்சியில் இணைந்தார். அவருக்கு நடிகர் விஜய் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் என்ற முக்கிய பொறுப்பை வழங்கினார். அதன்பிறகு சமீபத்தில் கட்சியில் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளராகவும் பதவி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து நேற்று மதிமுக அதிமுக கட்சிகளில் இருந்து பிறகு திமுக ஆதரவாளராக மேடைகளில் பேசி வந்த அரசியல் பேச்சாளா் நாஞ்சில் சம்பத், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த உடனே அவரை தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கிய விஜய், அவருக்கு கட்சியின் பரப்புரை செயலாளர் பதவியையும் தந்து விட்டார்.

- Advertisement -

ஏற்கனவே தவெக கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக ராஜ்மோகன் இருந்து வருகிறார். அவர்தான் விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேசி வருகிறார். இந்த சூழலில் பரப்புரை செயலாளர் பதவி நாஞ்சில் சம்பத்துக்கு உடனடியாக வழங்கப்பட்டது ராஜ்மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதிருப்தியை தந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் தவெக கட்சியை பொருத்த வரை விஜய் ஒருவரை தவிர மற்ற யாருமே பெரிய அளவில் மக்களிடம் அறிமுகம் இல்லாதவர்கள். மக்களின் செல்வாக்கை பெறாதவர்கள். அதனால் ஆதவ் அர்ஜூனா செங்கோட்டையன் நாஞ்சில் சம்பத் போன்ற பிரபலமான அரசியல் பிரமுகர்கள் தவெக கட்சியில் இணைவதால் அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்து விஜய் அவர்களை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார். அதே நேரத்தில் புதிதாக கட்சிக்கு வருபவர்கள் உயர்ந்த பதவிகளை பெறுவது சில அடிமட்ட கட்சி நிர்வாகிகளுக்கு புகைச்சலை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்