விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கி இப்போது 60 நாட்களை கடந்து சென்றுக்கொண்டு இருக்கிறது. கடந்த 8 சீசன்களை விட இந்த 9வது சீசன் ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏனெனில் யூடியூப் பிரபலங்களை இறக்கிவிட்டு இந்த முறை இந்த சீசனை ஒப்பேற்றி இருக்கிறது விஜய் டிவி என்று பலரும் ஆரம்பத்திலேயே விமர்சனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் பிரவீன் ராஜ் நல்ல முறையில் விளையாடிக் கொண்டு இருந்தார். அவரை திடீரென வெளியேற்றி பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தனர். நேற்றைய வார இறுதி எலிமினேசன் நிகழ்ச்சியில் பிரஜின் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் எதுவுமே செய்யாமல் நாள் முழுவதும் கார்டன் ஏரியாவில் போடப்பட்டிருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசுவதே சில போட்டியாளர்களின் வேலையாக உள்ளது. அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நல்ல போட்டியாளர்களை வெளியேற்றுவது சிறிதும் நியாயமில்லை என்பதே பலரது விமர்சனமாக உள்ளது.
குறிப்பாக கனி எஃப்ஜே சுபிக்ஷா சபரி போன்றவர்களின் செயல்பாடு சுத்தமாக இல்லை. இவர்களால் இந்த நிகழ்ச்சியில் எந்த சுவாரசியமும் இல்லை. அதே போல் மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ள ஆதிரை வழக்கம் போல சும்மா தான் நேரத்தை கழிக்கிறார். அவரை எதற்கு மீண்டும் வீட்டுக்குள் பிக்பாஸ் அனுப்பினார் என்றே தெரியவில்லை.
அதே போல் பிக்பாஸ் வீட்டுக்குள் பார்வதி போன்ற ஒரு போட்டியாளர் இருப்பது அந்த நிகழ்ச்சியை பார்க்கவே சிலர் வெறுப்படையும் நிலை உள்ளது. உண்மையில் அந்த பெண்ணின் அடாவடியான பேச்சும் நடவடிக்கையும் கம்ருதீனுடன் அவர் அத்துமீறி நடந்து கொள்ளும் விதமும் இதை எல்லாம் எப்படி பிக்பாஸ் அனுமதிக்கிறார் என்றுதான் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரவீன் ராஜ் பிரஜன் போன்றவர்களை விட பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கவே தகுதியற்ற போட்டியாளர்கள் இன்னும் இருந்துக்கொண்டு நாட்களை கழித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களை வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு நல்ல போட்டியாளர்களை வெளியேற்றுவதுதான் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதா என்று பலரும் கேள்விகளை முன்வைக்கின்றனர்.





