- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சங்கத் தேர்தல் போட்டியில் திடீர் திருப்பம், இந்த முறை களத்தில் இவர்களா? - விவகாரம்...

நடிகர் சங்கத் தேர்தல் போட்டியில் திடீர் திருப்பம், இந்த முறை களத்தில் இவர்களா? – விவகாரம் செய்த பார்த்திபனுக்கு பாரதிராஜா சொன்ன அட்வைஸ்

- Advertisement -

இந்த மாதம் 16ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த தடவை யார் நடிகர் சங்க பொறுப்புகளுக்கு வரப் போகிறார்கள் என்பதில் ஒரு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் கடந்த முறை இயக்குநர் விக்ரமன் அணி, இயக்குநர் பாக்யராஜ் அணி என இருதரப்பாக தேர்தலை சந்தித்தனர்.

இந்த போட்டியில் இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றார். ஆனால் இந்தமுறை அவர் போட்டியிடவில்லை. படங்களை இயக்க வேண்டி இருப்பதால், அதற்கான நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதனால் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என அவர் ஒதுங்கிக்கொண்டார்.

- Advertisement -

அதே போல் இயக்குநர் பாக்யராஜூம் இந்த முறை இயக்குநர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை. நான் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கிறேன். அதனால் இந்த பதவியே போதும். அதனால் இயக்குநர் சங்கத் தலைவராக விரும்பவில்லை என, அவரும் இந்த போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

இதையடுத்து இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்வி உதயகுமார், செயலாளராக பேரரசு, பொருளாளராக சரண் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதனால் வரும் 16ம் தேதி நடக்கும் இயக்குநர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர்.

- Advertisement -

அதேபோல் துணைத் தலைவர் உள்ளிட்ட இதர பதவிகளுக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புக்கு உரிய நிர்வாகிகளும் பதவியேற்க உள்ளனர். இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி தேர்வு என்பது, சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த முறை ஆர்கே செல்வமணியை எதிர்த்து பாக்யராஜ் போட்டியிட்டதால், இந்தமுறை ஆர்வி உதயகுமாரை எதிர்த்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் போட்டியிட ஆயத்தமாகி இருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த மூத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்கள், சங்கத் தேர்தலில் ஒற்றுமை வேண்டும். அதனால் இந்த முறை போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதால், பார்த்திபன் போட்டியில் இருந்த விலகிக்கொண்டார்.

- Advertisement -

சற்று முன்