- Advertisement -
Homeபொழுதுபோக்குஉன்னை பிடிக்கும் உன் நடிப்பு பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்வார், அவர் ஒரு குழந்தை -...

உன்னை பிடிக்கும் உன் நடிப்பு பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்வார், அவர் ஒரு குழந்தை – மறைந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வந்த புதிதில் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்த படம் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம்தான் இதுதான் அவர் இயக்கிய முதல் படம். கமல் ஸ்ரீதேவி இணைந்து நடித்த இந்த படத்தில் பரட்டையன் என்ற கேரக்டரில் வில்லனாக ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

இந்த படம்தான் ரஜினிக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு கொடி பறக்குது என்ற படத்திலும் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

பாரதிராஜா இயக்கிய பல படங்கள் வெற்றிப் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. அதே போல் பல நடிகர்கள் நடிகைகளை தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் பாரதிராஜா. தனது 84வது வயதில் இன்று காலை பாரதிராஜா மறைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவினர் மத்தியில் பலத்த சோகத்தை தந்துள்ளது.

இந்நிலையில் பாரதிராஜா மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக நாளை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த விதமான படப்பிடிப்புகளும் படம் தயாரிப்பு சார்ந்த பணிகளும் நடக்காது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது, பல நடிகர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழ வைத்தவர் பாரதிராஜா. திரையுலகில் யாருக்கு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுத்தது பாரதி ராஜா தான். அவர் ஒரு குழந்தையை போன்றவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர்.

என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் என் நடிப்பை பிடிக்காது என்று வெளிப்படையாக கூறுவார். அவரது மறைவு திடீரென்று நடக்கவில்லை. உயிரோடு இருக்கும்போதே அவரை பார்க்கணும்ன்னு சொன்னேன். சரி ஆகிடுவார், அப்போ வாங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க. லாஸ்ட் டைம்ல அவர் உயிரோடு பார்க்க முடியாமலேயே போயிடுச்சு என்று நடிகர் ரஜினிகாந்த் வருத்தமாக கூறினார்

- Advertisement -

சற்று முன்