- Advertisement -
Homeபொழுதுபோக்குரெட்ட தல படம் பார்த்த நடிகர் தனுஷ்… என்ன விமர்சனம் செய்தார் தெரியுமா? - உண்மையை...

ரெட்ட தல படம் பார்த்த நடிகர் தனுஷ்… என்ன விமர்சனம் செய்தார் தெரியுமா? – உண்மையை போட்டுடைத்த படத்தின் நாயகன் அருண் விஜய்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் விஜயகுமார். அவரது மகன்தான் நடிகர் அருண் விஜய். ஆரம்பத்தில் அருண்குமார் என்ற பெயரில் நடித்த அவர் ஒரு கட்டத்துக்கு பிறகு தனது பெயரை அருண்விஜய் என மாற்றிக்கொண்டார். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் உள்ள அருண் விஜய் இன்னும் முன்னணி நட்சத்திர நடிகராக உயரவில்லை.

இருப்பினும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். பிரியம் கங்கா கௌரி யானை தடையற தாக்க பாண்டவர் பூமி செக்கச் சிவந்த வானம் குற்றம் 23 மிஷன் சாப்டர் 1 என்னை அறிந்தால் தடம் வணங்கான் இட்லி கடை என பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடிப்பு சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அருண் விஜய் ரெட்ட தல என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். மான் கராத்தே கெத்து போன்ற படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ரெட்டை தல படம் வருகிற 25-ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ரெட்ட தல படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படத்தின் நாயகன் அருண்விஜய் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நடிகர் அருண்விஜய் பேசியதாவது, ரெட்டை தல படம் எங்களின் ஒன்றரை ஆண்டு கால உழைப்பில் இப்போது உருவாகி வெளிவந்திருக்கிறது. இந்த படக்குழுவுடன் பணி செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

- Advertisement -

வணங்கான் படத்துக்கு பிறகு வேறு மாதிரியான ஒரு கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அப்போதுதான் இந்த படத்தின் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன், ரெட்ட தல படத்தின் கதையை சொன்னார். எனக்கு கேட்டவுடனே கதை பிடித்து விட்டது. இது ஒரு தியேட்டரிக்கல் படமாக ரசிகர்களுக்கு இருக்கும்.

இந்த படத்தில் வரும் கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடலை தனுஷ் ப்ரோ பாடியிருக்கிறார். இட்லி கடை படத்தில் அவருடன் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, தனுஷிடம் இந்த படத்தின் சில காட்சிகளை காண்பித்தேன். அவர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார். இந்த படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது. எல்லோருக்கும் ரெட்ட தல படம் நிச்சயம் பிடிக்கும் என்று நடிகர் அருண் விஜய் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்