- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்கள் நடித்த படங்கள் மாபெரும் வசூல் சாதனை செய்வது உண்மைதானா? - திடீர் என சந்தேகத்தை...

அவர்கள் நடித்த படங்கள் மாபெரும் வசூல் சாதனை செய்வது உண்மைதானா? – திடீர் என சந்தேகத்தை கிளப்பிய நடிகை சிம்ரன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டுகள் காலகட்டத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். குறிப்பாக நேருக்கு நேர் ஒன்ஸ்மோர் விஐபி அவள் வருவாளா வாலி பிரியமானவளே பம்மல் கே சம்பந்தம் ஏழுமலை ஜோடி பஞ்சதந்திரம் அரசு என பல படங்களில் சிம்ரன் நடித்திருந்தார். அவரது நடனம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகையாக சிம்ரன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சிம்ரன், சீமராஜா மறறும் அந்தகன் போன்ற படங்களில் வில்லியாகவும் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக நடிகை சிம்ரன் தனக்கு செட் ஆகக்கூடிய நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த ஆண்டு நடிகர் சசிகுமாருடன் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சிம்ரன் கூறியதாவது, இந்த ஆண்டில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி டிராகன் மற்றும் 3 பிஎச்கே ஆகிய படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன. வசூல் ரீதியாகவும் இந்த படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்கள் வெளியாகி ஒரு வாரம் கழித்து தியேட்டர்களுக்கு சென்றாலும் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

- Advertisement -

ஆனால் மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு சமூக வலைதளங்களில் பல நூறு கோடி ரூபாய் வசூல் சாதனை என்கிறார்கள். ஆனால் தியேட்டர்களுக்கு ஒரு வாரம் கழித்து சென்றால் மக்கள் கூட்டமே சுத்தமாக இருப்பதில்லை. ஆனால் வசூலில் இவ்வளவு மிகைப்படுத்துகிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நடிகை சிம்ரன் எந்த நடிகரின் படம் குறித்து இப்படி குறிப்பிட்டு பேசுகிறார் என்று வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். பொதுவாகவே சில நட்சத்திர நடிகர்களின் படங்கள் குறைந்த வசூலில் இருந்தாலும் அதிக வசூல் என்று வலைதளங்களில் பில்டப் செய்து அந்த படத்தை பிரமோசன் செய்வதும் மீண்டும் அந்த நடிகரின் கால்ஷீட் வாங்க இப்படி ஒரு யுக்தி இருப்பதாகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்