- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாருக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறது… அது எதிர்காலத்தில் நிறைவேற அதிக வாய்ப்புள்ளது -...

நடிகர் அஜீத்குமாருக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறது… அது எதிர்காலத்தில் நிறைவேற அதிக வாய்ப்புள்ளது – இயக்குனர் ஏஎல் விஜய் நம்பிக்கை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை இயக்கியவர் ஏஎல் விஜய். குறிப்பாக தெய்வத் திருமகள் தலைவா தாண்டவம் இது என்ன மாயம் தலைவி வனமகன் தேவி தேவி 2 லட்சுமி மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களை இயக்கியவர். குறிப்பாக அஜீத்குமார் நடித்த கிரீடம் படத்தை இயக்கியவர் ஏஎல்விஜய். இதுதான் அவரது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஏஎல் விஜயின் மனைவி அமலா பால். தலைவா தெய்வத் திருமகள் உள்ளிட்ட படங்களில் ஏஎல் விஜய் இயக்கத்தில் அமலா பால் நடித்திருந்தார். அப்போது ஏஎல் விஜய்க்கும் அமலா பாலுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். நடிகை அமலா பால் பிறகு தொழிலதிபர் ஒருவரை 2வது மணம் செய்துக்கொண்டார்.

- Advertisement -

இயக்குனர் ஏஎல் விஜய் இவர் தற்போது மலேசியாவில் இருந்து வருகிறார். நடிகர் அஜித்குமார் பங்கேற்று வரும் கார் ரேஸ் பயணத்தை ஆவணப்படமாக எடுத்து வருகிறார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஏஎல் விஜய் கூறியதாவது, மலேசியாவுக்கு அஜீத்குமார் என்னை அழைத்தார். கார் ரேசிங் தொடர்பான விஷயங்களை ஒரு ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.

இதையடுத்து இங்கு நடக்கும் கார் ரேஸ் பயணத்தை நான் தினமும் படமாக்கி வருகிறேன். ஆனால் அஜீத்தின் கார் பயணம், கார் ரேசிங் பயணப் படமாக இருக்கப் போகிறதா இல்லை ஆவணப்படமாக உருவாகிறதா என்றால் தற்போதைக்கு இதை ஒரு டாக்குமெண்ட் படமாக எடுத்து வருகிறோம். அது திரைப்படமா, டாகுமெண்ட் படமாக இருக்குமா என்பதை இப்போது கூற முடியாது.

- Advertisement -

கடைசியாக படமாக்கியதை மொத்தமாக பார்த்துவிட்டு தான் படமாக வெளியிடுவதா, டாக்குமெண்டாக வெளியிடுவதா என்பது குறித்து முடிவெடுப்போம். ஆனால் இது கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அதுமட்டுமின்றி கார் ரேஸ் என்பது மிகவும் கடினமானது. அதை அருகில் இருந்து பார்க்கும்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.

சினிமாத்துறை என்பது வேறு. விளையாட்டு துறை என்பது வேறு. இதில் கார் ரேஸில் தற்போது அஜீத்குமார் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். எதிர் காலத்தில் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் பார்ப்பது போல, கார் ரேஸ் போட்டிகளையும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள். அப்படி ஒரு நிலையை தன் ரசிகர்களிடம் உருவாக்க வேண்டும் என்றுதான் அஜீத்குமார் ஆசைப்படுகிறார் என்று இயக்குனர் ஏஎல் விஜய் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்