- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதனால் தான் ரஜினி விஜய் அஜீத்குமார் நடித்த அந்த டப்பா படங்களே ஓடவில்லை - உண்மையை...

அதனால் தான் ரஜினி விஜய் அஜீத்குமார் நடித்த அந்த டப்பா படங்களே ஓடவில்லை – உண்மையை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்கள் நிறைய வந்தன. குறிப்பாக குடும்ப கதைகள் திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தன. அதே காலகட்டத்தில் மசாலா கதை படங்களும் நிறைய வெளிவந்தன. அப்பா அம்மாவை கொன்ற வில்லன்களை பழிவாங்குவதே பல படங்களின் ஹீரோக்களின் லட்சியமாக இருந்தது.

அப்படிப்பட்ட சில மசாலா படங்கள் வந்தாலும் நல்ல திரைக்கதையில் உருவான படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டன. ஹீரோயிசம் தாண்டி கதைக்காக ஓடிய படங்கள்தான் நிறைய இருந்தன. ஆனால் இப்போது ஹீரோவையும் பிரமாண்டத்தையும் வன்முறை காட்சிகளை மட்டுமே நம்பி அதிக படங்கள் எடுக்கப்படுகின்றன.

- Advertisement -

ஆனால் அப்படிப்பட்ட சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக அவை தோல்வி படங்களாக தான் இருக்கின்றன. பிரமோசன் என்ற பெயரில் ஒரு படம் ரசிகர்களிடம் அதிகளவில் திணிக்கப்பட்டு வேறு வழியின்றி அவர்கள் திரையரங்குக்கு வர வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர்.

அதே நேரத்தில் பிரமோசன் வாயிலாக மட்டுமின்றி ரிவ்யூ மூலமாகவும் சில சுமாரான படங்களை சூப்பர் ஹிட் படங்களாக விமர்சனம் செய்தும் ஒரு தரப்பு ரசிகர்களை ஏமாற்றுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்கிடையே டப்பா படங்களாக இருந்தாலும் பெரிய ஹீரோக்கள் நடித்தால் அந்த படங்கள் ஓடிவிடுமா என்பதும் பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது, எப்போதுமே நல்ல படங்கள் மட்டும்தான் தியேட்டர்களில் அதிக நாள் ஓடும். பெரிய நட்சத்திர ஹீரோக்கள் நடித்த படம் என்பதால் மட்டுமே ஒரு படம் ஓடிவிடாது. அந்த ஹீரோ நடித்த படம் என்பதற்காக மக்கள் வந்து படத்தை பார்க்க மாட்டார்கள். இதற்கு உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.

நடிகர் எம்ஜிஆர் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதுதான் அவர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வெளியாகி பிளாப் ஆனது. அதே போல் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்த போதுதான் வெளியான பாபா படம் சரியாக போகவில்லை. அதே போல் விஜய் உச்ச நடிகராக இருந்த போது வந்த பைரவா படம் ஓடவில்லை. டாப் நடிகராக அஜீத் இருந்த போது அவர் நடித்த ஜி படமும் ஓடவில்லை. அதனால் பெரிய ஹீரோ என்பதற்காக எந்த காலத்திலும் டப்பா படங்கள் ஓடியது இல்லை என்று வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்