- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தை மிஸ் பண்ணிட்டாங்க… அதை கொஞ்சம் வலுவா காட்டியிருந்தா இது சூப்பர் படம்தான் -...

அந்த விஷயத்தை மிஸ் பண்ணிட்டாங்க… அதை கொஞ்சம் வலுவா காட்டியிருந்தா இது சூப்பர் படம்தான் – சிறை படம் குறித்து விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் விக்ரம் பிரபு நடித்த சிறை படம் நாளை வெளியாக உள்ளது. இதற்கிடையே இந்த படம் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு திரையிடல் சென்னையில் நடந்தது. சிறை படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, தமிழ் சினிமாவில் காவல்துறை குறித்த படங்களில் உண்மைக்கு நெருக்கமான படங்களில் ஒன்று டாணாகாரன். அந்த படத்தின் கதை எழுதி இயக்கிய தமிழ், சிறை படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் பணியாற்றியுள்ளார்.

தமிழ் ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றியவர். படத்தின் கதையை பொருத்தவரை ஆயுதப்படையில் தலைமை கான்ஸ்டபிள் ஆக விக்ரம் பிரபு உள்ளார். அவருக்கு கீழ் 2 பேர் உள்ளனர். அவர்களின் வேலை வேலூர் சிறையில் இருக்கக்கூடிய கைதிகளை அழைத்துக்கொண்டு சென்று சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்து வரவேண்டும்.

- Advertisement -

இதில் இடையில் கைதி தப்பித்தாலோ கொல்லப்பட்டாலோ இவர்களின் வேலைக்கு பிரச்சனை வந்துவிடும். அவர்கள் அழைத்துச் செல்லும் இளம் வயது கைதிக்கு இவர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல வேண்டும். இதில் அந்த பையன் தப்பித்தானா இல்லையா, அதற்கு என்ன நோக்கம், அதற்கு அடுத்து என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை.

காவல்துறையில் ட்ரைனிங் எல்லாம் முடித்துவிட்டு வேலைக்கு வரும் காவல்துறையினருக்கு வேலை எப்படி இருக்கும் என்பதில் தான் இந்த கதை இருக்கிறது. நீதிமன்ற கட்சிகள் சிறப்பாக செய்துள்ளார்கள். படத்தில் வரக்கூடிய லவ் போர்ஷன் மட்டும் கொஞ்சம் பழசாகிவிட்டது. ஆனால் காவல்துறையில் உள்ளவர்களுக்கு இடையிலான உரையாடலை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். காவல்துறையில் பயன்படுத்திக் கொள்ளும் தொழில் முறை வசனங்களும் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

படத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். அதேபோல் சிறிய கதாபாத்திரத்திற்கும் சின்ன சின்ன காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார்கள் விக்ரம் பிரபு கதாபாத்திரம் அவருக்கு அளவு எடுத்து வைத்தது போல இருந்தது. மற்ற படங்களில் இருந்து இந்த படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுவது ஒரு காட்சி தான். அந்த காட்சியில் மூணாறு ரமேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது நடிப்பு ஸ்கோர் செய்துள்ளது. அவரது கதாபாத்திரம் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவரது டயலாக்களுக்கு தியேட்டர்களில் கைதட்டல்கள் கிடைக்கும். படத்தின் மற்றொரு முக்கியமான பலம் என்றால் அது படத்தின் பின்னணி இசை. பாடல்கள் தான் மனதில் நிற்கும் அளவுக்கு இல்லை. சண்டைக்காட்சி ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாமே நன்றாக இருந்தது. படத்தில் இருக்கக்கூடிய மெல்லிசான மத அரசியல், இளம் காதல ஜோடிகளின் போர்ஷனை மட்டும் கொஞ்சம் வலுவாக எடுத்திருந்தால் ரொம்பவும் நல்ல படம் என சொல்லி இருக்கலாம் ஆனால் ஓகே ரகம் படமாக உள்ளது என்று ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்