தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக, இயக்குனராக தன்னை வெளிப்படுத்தியவர் ஆர். பார்த்திபன். துவக்கத்தில் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பார்த்திபன், தாவணிக் கனவுகள் படத்தில் போஸ்ட்மேன் கேரக்டரில் நடித்திருந்தார். சிவாஜி கணேசனுடன் நடிக்கும் வாய்ப்பை பாக்யராஜ், பார்த்திபனுக்கு தந்திருந்தார்.
தொடர்ந்து புதிய பாதை படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக, இயக்குனராக அறிமுகமான பார்த்திபன், முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்தார். இந்த படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து இப்போதும் பார்த்திபன் முக்கிய நடிகராக இருக்கிறார்.
புதியபாதை படத்தில் நடித்த போது, பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், திருமணமாகி பல ஆண்டுகளான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது சீதா, சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் மீண்டும் சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து, அவரையும் ஒரே ஆண்டில் பிரிந்துவிட்டார்.
நடிகர் பார்த்திபன், இப்போது டீன்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஎப்எக்ஸ் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக கோவையை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பணிசெய்தார். இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளை செய்து முடிப்பதற்காக ரூ. 42 லட்சம் முன்பணமாக அவருக்கு கொடுத்துள்ளார் பார்த்திபன். கடந்த பிப்ரவரி 20ம் தேதிக்குள் வேலையை முடிப்பதாக கூறி, ரூ. 68 லட்சம் அவர் கேட்ட நிலையில், அதில் ரூ. 42 லட்சத்தை பார்த்திபன் தந்துள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து, அவர் டீன்ஸ் படத்தின் கிராபிக் பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை. அதனால் மேலும் பார்த்திபன் கடந்த எப்ரல் மாதம் 19ம் தேதி வரை கால அவகாசத்தை அதிகரித்து தந்து, கிராபிக்ஸ் பணிகளை முடித்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால், குறிப்பிட்ட ஏப்ரல் மாதத்துக்குள் அப்பணிகளை முடிக்க முடியாது என்று கூறிய சிவபிரசாத், நான்கில் ஒரு பகுதி பணியை மட்டுமே முடித்துள்ளார்.
மேலும் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி, பார்த்திபனின் மின்னஞ்சலுக்கு 88.38 லட்சம் ரூபாய் கேட்டு அனுப்பியுள்ளார். இதையடுத்து நடிகர் பார்த்திபன், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில், கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். மனிதம், மனிதநேயம் என்று பேசி வரும் நடிகர் பார்த்திபனிடமே இப்படி ஒரு மோசடியா என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.





