- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரை ஆன்லைனில் மோசடி செய்த ஏமாற்று பேர்வழிகள் - அம்மா பேரை சொன்னதும்...

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரை ஆன்லைனில் மோசடி செய்த ஏமாற்று பேர்வழிகள் – அம்மா பேரை சொன்னதும் இப்படி அள்ளிக் கொடுத்துட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜீவி பிரகாஷ்குமார். தொடர்ந்து அவர் இசையமைத்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. குறிப்பாக கிரீடம் ஆடுகளம் ஆயிரத்தில் ஒருவன் மதராசபட்டணம் என பல படங்கள் அவரது இசையில் வெளிவந்த ஹிட் படங்களாகும்.

ஜீவி பிரகாஷ் குமார் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இசையமைத்து வருகிறார். அதே நேரத்தில் ஜிவி பிரகாஷ் குமார் உதவும் மனப்பான்மை கொண்டவர். யார் வந்து உதவி கேட்டாலும் உடனே செய்யும் இரக்க மனம் கொண்டவர். சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் ஆன்லைனில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமாரை வசமாக ஏமாற்றி மோசடியாக பணம் பறித்துள்ளனர்.

- Advertisement -

அந்த தகவல் இப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீவி பிரகாஷ்குமாரின் எக்ஸ் பக்கத்தில் மாம் லிட்டில் கிங் என்ற ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து அவருக்கு ஒரு கோரிக்கை வந்துள்ளது. அதில் கோரிக்கை விடுத்த நபருக்கு உதவி செய்துதான் ஜீவி பிரகாஷ் ஏமாந்துள்ளார்.

அந்த பதிவில் அடையாளம் தெரியாத ஒரு நபர், என்னுடைய அம்மா இறந்து விட்டார். எனக்கு ஒரு சகோதரி மட்டும்தான். எங்களுக்கு அப்பா இல்லை. என் அம்மாவை அடக்கம் செய்யக்கூட கையில் பணம் இல்லை. எனக்கு பதவி உதவி செய்யுங்கள் என்று ஜீவி பிரகாஷ் குமாரிடம் கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதில் அவரது அம்மா புகைப்படம் என்று ஒரு பெண்மணியின் புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை உண்மை என நம்பிய ஜீவி பிரகாஷ் குமார், அந்த நபரின் ஜிபே நம்பரை வாங்கி 20 ஆயிரம் ரூபாய் அனுப்பி உதவி செய்திருக்கிறார். அந்த நபர் ஜீவி பிரகாஷ் குமாரை பொய் சொல்லி ஏமாற்றியது பிறகுதான் தெரிய வந்துள்ளது.

ஏனெனில் அந்த பதிவில் இருந்த அம்மாவின் புகைப்படம் 2002ம் ஆண்டில் ஆன்லைனில் எடுக்கப்பட்ட ஒரு பொய்யான புகைப்படம் என்பது பின்பு தெரிய வந்துள்ளது. இப்படி ஏமாற்றப்பட்ட ஜீவி பிரகாஷூக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அவரது உதவும் நல்ல குணத்தை இப்படி மோசடி செய்து ஏமாற்றி விட்டார்களே என்றும் பலரும் திட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்