- Advertisement -
Homeபொழுதுபோக்குமலேசியாவில் கோலாகலமாக துவங்கிய ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா - அவங்க யாருமே வரலையே…? -...

மலேசியாவில் கோலாகலமாக துவங்கிய ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா – அவங்க யாருமே வரலையே…? – பலத்த ஏமாற்றத்தில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வௌியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கித் ஜலீல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த விழாவில் விஜய் நடித்த படங்களின் இசை கச்சேரி மற்றும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா என 2 நிகழ்வுகளை இந்த விழா இப்போது நடந்து வருகிறது.

இந்த விழாவில் கலந்துக்கொள்வதற்காக நேற்று காலையே நடிகர் விஜய் தனது அம்மா ஷோபா மற்றும் அப்பா எஸ்ஏ சந்திரசேகருடன் மலேசியா புறப்பட்டுச் சென்றார். இயக்குனர்கள் அட்லி நெல்சன் திலீப்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் நேற்று மலேசியாவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்ற நிலையில் இன்று அவர்கள் விழா அரங்க பகுதியில் காணப்பட்டனர்.

- Advertisement -

நீலநிற கோட் சூட் அணிந்த நிலையில் நடிகர் விஜய் இந்த விழாவில் கலந்துக்கொண்டார். இப்போது இசையமைப்பாளர் அனிருத் தலைமையில் இசை நிகழ்ச்சி மேடையில் நடந்து வருகிறது. விழா அரங்கில் தவெக கட்சி கொடியை காட்டி ஆர்ப்பரித்த ஒருவரை அங்கிருந்த மலேசியா போலீசார் உடனடியாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் விஜயை மேடையில் பார்த்ததும் அரங்கில் இருந்த ஏராளமானோர் டிவிகே டிவிகே என கூச்சலிட தொடங்கினர். இங்கே அப்படி கூச்சலிடக் கூடாது என நடிகர் விஜய் கையை அசைத்து சைகை செய்தார். இந்த விழாவின் முடிவில் நடிகர் விஜய் ஏற்புரை வழங்க உள்ளார். அவரது பேச்சை கேட்க விழா அரங்கில் மக்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த விழாவில் நடிகர் அஜீத்குமார் கலந்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஏனெனில் அவர் இப்போது கார் ரேஸில் கலந்துக்கொண்ட நிலையில் மலேசியாவில் தான் இருக்கிறார். அதனால் அவர் விழாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜீத்குமார் இதுவரை விழா பகுதிக்கு வரவில்லை.

அத்துடன் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா ஷாஷா ஆகியோரும் இந்த விழாவுக்கு வரவில்லை. சினிமாவை விட்டு முற்றிலும் விலகி உள்ள இது விஜய்க்கு நடக்கும் வழியனுப்பு விழா என்ற நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த விழாவுக்கு வராதது ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை தந்துள்ளது. இந்த விழாவில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற ஷோபா கோடம்பாக்கம் ஏரியா என்ற பாடலை விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

- Advertisement -

சற்று முன்