- Advertisement -
Homeபொழுதுபோக்குகில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கிய நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா… மருத்துவமனையில் அனுமதி -...

கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கிய நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா… மருத்துவமனையில் அனுமதி – டாக்டர்கள் என்ன சொல்றாங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. நடிகர் அஜீத்குமார் நடித்த வாலி அவர் இயக்கிய முதல் படம். இந்த படம் எஸ்ஜே சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக வரவேற்பை பெற்றது.

நடிகர் அஜீத்குமாருக்கு வாலி படமும் நடிகர் விஜய்க்கு குஷி படமும் மிகப்பெரிய அடையாளங்களாக அவர்களது சினிமா பயணத்தில் அமைந்தன. இந்த 2 படங்களுமே அவர்களது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை முன்னேற்றத்தை ஏற்படுத்தின. ஏனெனில் 2 படங்களுமே வெள்ளிவிழா படங்கள். அஜீத்குமார் வில்லனாக முதன்முறையாக நடித்ததும் வாலி தான்.

- Advertisement -

இதையடுத்து நடிகராகவும் மாறிய இயக்குனர் எஸ்ஜே சூர்யா அன்பே ஆருயிரே நியூ போன்ற சில படங்களை அவரே டைரக்ட் செய்து அவரே நாயகனாகவும் நடித்தார். திருமகன் வியாபாரி கள்வனின் காதலி என பிற இயக்குனர்களின் படங்களிலும் நடித்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

நடிகராக இயக்குனராக இருந்த எஸ்ஜே சூர்யா சில சர்ச்சைகளிலும் சிக்கி 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து வில்லனாக நாயகனாக பல படங்களில் நடித்து நடிப்பு அரக்கன் என்ற புகழுடன் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

- Advertisement -

மார்க் ஆண்டனி மாநாடு ராயன் கேம் சேஞ்சர் இந்தியன் 2 என பல படங்களில் வில்லன் கேரக்டரில் மிரட்டிய எஸ்ஜே சூர்யா இப்போது மீண்டும் டைரக்‌ஷனில் இறங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் கில்லர் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவரே நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று கில்லர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு காலில் இரும்பு கம்பிகள் குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 15 நாட்கள் அவர் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனால் கில்லர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்