- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிபதி… மேல் முறையீடு செய்த சென்சார் போர்டு -...

ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிபதி… மேல் முறையீடு செய்த சென்சார் போர்டு – விஜய் படம் ரிலீஸில் தொடரும் சிக்கல்!

- Advertisement -

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்று 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை குழு முடிவு எடுத்த நிலையில் தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஒரு படத்தை தணிக்க செய்ய 15 நாட்கள் தேவைப்படும் என்பதால் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்க 4 வாரம் அவகாசம் தேவை என்றும் தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் வாதிட்டது.

- Advertisement -

இதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்று வழங்க பரிந்துரைத்தனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு படத்தை அனுப்ப வேண்டும். அதிக உறுப்பினர்களின் முடிவை எப்படி செல்லாது என்று சொல்ல முடியும் என தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இன்று 9ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்குவதாக கூறியது.

இந்நிலையில் இன்று நீதிபதி பி டி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்த வழக்கில் அவர் தீர்ப்பளித்தார். நீதிபதி பி டி ஆஷா அளித்த தீர்ப்பில், ஜனநாயகன் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியது தவறானது. உடனடியாக அந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவை அடுத்து ஜனநாயகன் படம் ஏற்கனவே வழங்கப்பட்ட யு/ஏ சான்றுடன் வெளியாக தயாராக இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இதற்கிடையே தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இதை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. இதை மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ஒருவேளை இன்று மதியம் இல்லாவிட்டால் வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிகிறது. இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய உள்ளதால் ஜனநாயகன் படம் வெளியிட்டில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்