- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் என்னோட கடைசி படம் என்று நடிகர் விஜய் சொன்னது அரசியல்… எனக்கு அதில் உடன்பாடு...

ஜனநாயகன் என்னோட கடைசி படம் என்று நடிகர் விஜய் சொன்னது அரசியல்… எனக்கு அதில் உடன்பாடு இல்லே – விளாசித் தள்ளிய இயக்குனர்!

- Advertisement -

பொதுவாழ்வுக்கு வந்துவிட்டாலே பலவிதமான விமர்சனங்களை சந்தித்துதான் ஆக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதுவும் சமூக வலைதளங்கள் பெருகி விட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் வைரலாகி பலருக்கும் சிக்கி திண்டாடி திணறிப் போய்விடுகின்றனர்.

அந்த வரிசையில் இப்போது முக்கியமான ஒருவராக அதிகளவில் விமர்சனத்தில் சர்ச்சைகளில் சிக்கும் ஒருவராக நடிகர் விஜய் மாறியிருக்கிறார். அதுவும் சினிமா நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிய பிறகு பலவிதமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அவரது திரைப்பட துறை சார்ந்த சிலரும் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

- Advertisement -

அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்ற விஜய்க்கு அரசியல் சார்ந்தும் விமர்சனங்கள் வருகின்றன. சினிமாவில் விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றதால் அங்கிருந்தும் விமர்சனங்களை சந்திக்கிறார். இப்போது அவர் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் மிகப்பெரிய சிக்கலில் மாட்டியுள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் அந்த படமே இன்று ரிலீஸ் ஆகவில்லை. எப்போது ரிலீஸ் ஆகும் என்றும் தெரியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது, ஜனநாயகன் தான் விஜயோட கடைசி படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதில் உடன்பாடும் இல்லை. அவர் கடைசி படம் என்று சொன்னதுக்கு பின்னாடி ஒரு அரசியலா கூட இருக்கலாம். ஏனென்றால் கடைசி படம் என்று சொன்னால் தான் மக்கள் முழுசா நம்புவாங்க.

- Advertisement -

இல்லை என்றால் மறுபடியும் சினிமாவில் நடிக்க போயிடுவாருன்னு நினைப்பாங்கன்னு கூட அப்படி விஜய் சொல்லியிருக்கலாம். எப்படி இருந்தாலும் அவர் படத்துல நடிக்க மாட்டேன் என்று சொன்னது தேவையில்லாத விஷயம் என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களான சிவகாசி திருப்பாச்சி படங்களை இயக்கிய இயக்குனர்தான் பேரரசு என்பதும் கவனிக்கத்தக்கது. நடிகர் விஜய் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தாலும் அவர் அரசியலில் பெற்ற செல்வாக்கை ஒரு போதும் ரசிகர்கள் சரிய விட மாட்டார்கள். அரசியல் சினிமா இரண்டிலும் விஜய் தொடர்ந்து ஜெயிப்பார் என்று தளபதி ரசிகர்கள் பேரரசு கருத்துக்கு பதில் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்