- Advertisement -
Homeபொழுதுபோக்குபகிரங்க மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் கானா வினோத்… தெரியாம தப்பு செஞ்சுட்டேன், இப்போ தான் எனக்கே...

பகிரங்க மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் கானா வினோத்… தெரியாம தப்பு செஞ்சுட்டேன், இப்போ தான் எனக்கே தெரிஞ்சுது என்று ஆதங்கம்!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. 100 நாட்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சி வரும் 18ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அன்று இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது அதிகாரபூர்வமாக மேடையில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சீசனில் இறுதி போட்டியாளர்களாக விக்கல்ஸ் விக்ரம் திவ்யா கணேஷ் அரோரா மற்றும் சபரிநாதன் ஆகியோர் உள்ளனர். இதில் திவ்யா கணேஷ்தான் டைட்டில் வின்னராக வேண்டும் என்பது பெரும்பாலான பிக்பாஸ் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் அரோராவுக்கு டைட்டில் வின்னர் தர பிக்பாஸ் டீம் தர திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இதற்கிடையே டைட்டில் வின்னராக நிச்சயம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் கானா வினோத் தான். ஆனால் அவர் பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ. 18 லட்சம் பணத்துடன் வெளியேறி விட்டார். அவரது அவசர முடிவை பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டைட்டில் வின்னராக ரூ. 50 லட்சம் பணத்துடன் வந்திருக்க வேண்டியவர். தவறான முடிவை எடுத்துவிட்டார் என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கானா வினோத்துக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. நேற்று முன்தினம் அவர் வசிக்கும் சென்னை ராயபுரம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் அவர் தலைப்பாகை அணிந்தபடி ஊர்வலமாக வர வாண வேடிக்கை பட்டாசு கலைக்குழு நிகழ்ச்சி என களை கட்டியது.

இதைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட பாடகர் கானா வினோத் கூறியதாவது, என்னை மன்னித்து விடுங்கள். வெளியே வந்த பிறகுதான் உங்களின் அன்பை நான் தெரிந்துக்கொண்டேன். உண்மையில் எனக்கு வெளியே என்ன நிலவரம் என்று தெரியாமல் போய்விட்டது. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு அன்பு என் மீது வைத்திருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் யார் சொல்லியும் நான் பணப்பெட்டியை எடுக்கவில்லை. என் சொந்த முடிவாக தான் நான் அதை எடுத்தேன். தயவு செய்து உள்ளே இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களை யாரும் தவறாக பேச வேண்டாம். அப்படி பேசவும் கூடாது. அவர்களில் யார் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றாலும் எனக்கு சந்தோஷம்தான். என் மீது மக்கள் வைத்துள்ள அன்புக்கு என்ன கைமாறு செய்வது என்று தெரியவில்லை. மிகவும் நன்றி என்று அந்த வீடியோவில் கானா வினோத் பேசியிருக்கிறார்.

சற்று முன்