- Advertisement -
Homeபொழுதுபோக்குபாகுபலி நடிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்தாரா நடிகை பூஜா ஹெக்டே? கேரவனுக்குள் என்ன நடந்தது? -...

பாகுபலி நடிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்தாரா நடிகை பூஜா ஹெக்டே? கேரவனுக்குள் என்ன நடந்தது? – நடந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வருமா?

- Advertisement -

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் அந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கடந்த 2012ம் ஆண்டில் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

அதனால் பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை. அதன் பிறகு பூஜா ஹெக்டே தெலுங்கு படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பல வெற்றி படங்களை கொடுத்ததால் அவர் நட்சத்திர நடிகையாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திருப்பி வந்தார்.

- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து பூஜா ஹெக்டே தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தில் கதாநாயகியாக நடித்தார். கடந்தாண்டில் வெளிவந்த ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் மோனிகா பெலூசி என்ற பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனமாடி இன்னும் அதிக வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து இயக்குனர் எச் வினாத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகர் விஜய்க்கு 2வது முறையாக இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே நேர்காணல் ஒன்றில் பேசும்போது ஒரு பரபரப்பான விஷயத்தை கூறியதாக இணையத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய பான் இந்தியா படத்தில் நான் நடித்தேன். அந்த படத்தில் நான் பணிபுரிந்த போது ஒரு நட்சத்திர ஹீரோ என்னுடைய கேரவனுக்குள் அனுமதியின்றி நுழைந்துவிட்டார். அப்போது என்னிடம் வரம்பு மீறி அவர் உடலில் சில அந்தரங்க பாகங்களில் தொட்டார். உடனடியாக அவரை நான் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். அந்த சம்பவத்துக்கு பிறகு அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை என்று பூஜா ஹெக்டே கூறியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த நடிகர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்த நடிகர் பிரபாஸ் தான் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது. பூஜா ஹெக்டே இதுபற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பாகுபலி போன்ற படங்களில் நடித்த பிரபாஸ் போன்ற ஒரு நட்சத்திர நடிகர் இதுபோன்ற முறைகேடாக நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனினும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை பூஜா ஹெக்டே தானாக முன்வந்து விளக்கம் அளித்தால் தான் உண்மை தெரியவரும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்