- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயை யாரும் நம்பாதீங்க… அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சு போயிடுவார் - புலி பட தயாரிப்பாளர்...

நடிகர் விஜயை யாரும் நம்பாதீங்க… அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சு போயிடுவார் – புலி பட தயாரிப்பாளர் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் செல்வகுமார் கடுமையாக விஜய் பற்றி விமர்சித்து பேசியிருக்கிறார். சுமார் 27 ஆண்டுகளாக நடிகர் விஜயின் மேலாளராகவும் அவரது பிஆர்ஓ ஆகவும் பணிசெய்தவர் பி.டி செல்வகுமார். நடிகர் விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

நடிகர் விஜயிடம் இருந்து விலகிய பி.டி செல்வக்குமார் சமீபத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இப்போது திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளராக உள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பி.டி செல்வகுமார் கூறியதாவது, திமுக தலைமை உத்தரவிட்டால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன். விஜய் எந்த தொகுதியில் யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு எதிராக களம் இறங்கி பணியாற்றுவேன்.

- Advertisement -

ஏழை ரசிகர்களுக்கு விஜய் செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டுவேன். பாலாபிஷேகம் கட் அவுட் என ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டனர். அவர்களுக்கு வருமானம் தரக்கூடிய எந்த முயற்சியையும் விஜய் எடுக்கவில்லை. கப்பல் கவிழ்ந்தால் பயணிகளை காப்பாற்றி விட்டு தன்னுயிரை துறப்பவரே உண்மையான கேப்டன்.

ஆனால் கரூரில் தன்னை தேடி வந்து உயிரிழந்த ரசிகர்களை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து தப்பிச் சென்றவர் விஜய். அவரை பார்க்க வந்த அப்பாவி மக்கள் அநியாயமாக கரூரில் உயிரிழந்தனர். தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற போலி அரசியல்வாதிகள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

- Advertisement -

ஊழல் புகாரில் சிக்கியவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வரவில்லை. ஓய்வு எடுப்பதற்கான இடமாகவே தவெக கட்சியை நினைக்கின்றனர். விஜயின் அரசியல் வருகை இளைஞர்களுக்கு பெரும் ஆபத்தாக மாறப் போகிறது. வருகின்ற தேர்தலில் தோல்வியடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்கு விஜய் தள்ளப்படுவார்.

அதன் பிறகு விஜய் இந்தியாவில் இருக்க மாட்டார். வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடுவார் என்று பி.டி செல்வகுமார் அப்போது கூறியிருக்கிறார். எனவே இளைஞர்கள் விஜயை நம்பி பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். விஜயுடன் அவரது மேனேஜராக நீண்ட காலம் பயணித்த பி.டி செல்வகுமார் இப்படி பகிரங்கமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்