- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மாற்றமா? ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இதையும்...

அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மாற்றமா? ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இதையும் கொஞ்சம் கவனிக்கனும் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதங்களை பொருத்தவரை ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் காலகட்டமாக தான் இருந்தது. ஆறு மாதங்களில் 100க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியும், கடந்த 2 மாதங்களில் ரிலீஸ் ஆன சில படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. மற்றபடி எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன.

குறிப்பாக ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம், சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன், விஷால் நடித்த ரத்னம் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தன. கவின் நடித்த ஸ்டார் படமும் ட்ரெய்லர் இருந்த அளவுக்கு படம் சிறப்பாக இல்லை.

- Advertisement -

இதற்கிடையே கடந்த 6 மாதங்களாக வெளிவந்த மலையாள படங்கள் பலவும் தமிழில் பெரிய அளவில் வரவேற்பை, வெற்றியை பெற்றன. பல கோடி ரூபாய் வசூலை குவித்தன. குறிப்பாக மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேசம், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. இதனால் தமிழ் சினிமாவுக்கு போட்டியாக, மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த சூழலில், 2004ம் ஆண்டில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட, நடிகர் விஜய் நடித்த கில்லி படம், 20 ஆண்டுகளுக்கு பின்பு ரி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி தீர்த்தனர். 25 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது, ரி ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படத்துக்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு தந்துவிட்டனர்.

- Advertisement -

அதற்கு பின் வெளியான சுந்தர் சியின் அரண்மனை 4 படமும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது. தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா, உலக தரத்திலான படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து ரஜினியின் வேட்டையன், கமலின் இந்தியன் 2, விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம், அஜீத்குமாரின் விடாமுயற்சி, தனுஷின் ராயன், சூர்யாவின் கங்குவா, வெற்றிமாறனின் விடுதலை 2, மிஷ்கினின் ட்ரெயின் என அடுத்தடுத்த படங்கள் வெளிவர இருக்கின்றன. இதனால் தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் அலைமோதும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் அவ்வப்போது சின்ன பட்ஜெட் படங்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்