- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கவினுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடன இயக்குனர் - முதல் முறை இணையும் கூட்டணி,...

நடிகர் கவினுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடன இயக்குனர் – முதல் முறை இணையும் கூட்டணி, எதிர்காலத்தில் இவரும் ஒரு பிரபுதேவா போல மாறுவாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பெயர் பெற்றவர் சுந்தரம் மாஸ்டர். அவரது 3 மகன்களில் ஒருவர்தான் பிரபுதேவா. முதலில் நடனக் கலைஞராக சினிமாவுக்குள் வந்த பிரபுதேவா பிறகு டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பணிபுரிந்தார். ஒரு கட்டத்தில் அவரை காதலன் படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக இயக்குனர் ஷங்கர் மாற்றினார்.

அதைத் தொடர்ந்து பல படங்களில் பிரபுதேவா ஹீரோவாக நடித்தார். பிறகு போக்கிரி படம் மூலம் பிரபுதேவா டைரக்டராக மாறினார். இதே படத்தை இந்தியில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்க டைரக்ட் செய்தார். இப்போது நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் நடன இயக்குனர் என பல பரிமாணங்களில் பிரபுதேவா இந்திய சினிமாவில் இருந்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் வடிவேலுவுடன் யோகாசனம் செய்யும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

- Advertisement -

நடன இயக்குனர் பிரபுதேவா போலவே டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் இருந்து வருபவர் சாண்டி மாஸ்டர். பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்து வரும் சாண்டி மாஸ்டர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். அப்போது அவருடன் நடிகர் கவினும் இருந்தார். பிக்பாஸ்க்கு பிறகு சாண்டி மாஸ்டர், லியோ படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து லோகா என்ற மலையாள படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கவின் சாண்டி மாஸ்டர் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். திங்க் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் கென் ராய்சன் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். நடிகர் கவின் பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் சாண்டி மாஸ்டர் கமிட் ஆகி இருக்கிறார்.

- Advertisement -

கவின் சாண்டி மாஸ்டர் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது உள்ளது. பேண்டஸி காதல் காமெடி என ஜனரஞ்சகமான கதைகளத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஓஃப்ரோ இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் நடிக்கும் சக நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிக்காக சமீபத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் கவின் சாண்டி மாஸ்டர் இருவரும் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

நடன இயக்குனர் பிரபுதேவா சினிமாவில் பல பரிமாணங்களை அடைந்தது போல சாண்டி மாஸ்டரும் நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறியிருக்கிறார். அந்த வகையில் அவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் எதிர்காலத்தில் அவரும் ஒரு பிரபுதேவா போல மாறிவிடுவராா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அவர் நடித்த லோகா படம் மாஸ் ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்