- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட திரௌபதி 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் -...

நாளை ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட திரௌபதி 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் – இந்த வழக்கில் மதுரை கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. திரௌபதி பகாசூரன் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் திரௌபதி 2. இந்த படம் வருகிற 23ம் தேதி (நாளை) ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மகாமுனி அம்பலகாரர் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் இந்த படம் குறித்து மனுதாக்கல் ஒன்றை செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலையை தலைமை இடமாகக் கொண்டு 14ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னன் வீர வள்ளலார் தேவன். இவரது வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி 2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த படக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

வீர வல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கு பல கல்வெட்டுகள் செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் ஆதாரங்களாக உள்ளன. ஆனால் திரௌபதி 2 படத்தில் வீர வல்லாள தேவனை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக இயக்குனர் மோகன் ஜி சித்தரித்து படம் எடுத்துள்ளார்.

இந்த படத்தின் சுவரொட்டிகளில் வீர வல்லாள தேவன் என்பதை வீர வள்ளலாளன் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இது உள்நோக்கம் கொண்டது. மேலும் கள்ளர் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை இது ஏற்படுத்தும். இதை கண்டித்து மேலூரில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் படத்துக்கு அவசர அவசரமாக யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து தணிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திரௌபதி 2 படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்யவும் படத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று பிழைகளை திருத்தம் செய்யும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆர் விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் படத்துக்கு கடந்த டிசம்பர் 31ம் தேதி தணிக்கை குழு சான்று வழங்கி உள்ளது என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கி உள்ளதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. பொதுநல வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார். அதனால் குறிப்பிட்டபடி நாளை 23ம் தேதி திரௌபதி 2 படம் திரைக்கு வரும் என்பதில் எந்த தடையும் இல்லை.

- Advertisement -

சற்று முன்