- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது அக்கா மகன் ஜீவி பிரகாஷ்குமார் குறித்து மனம் திறந்து பேசிய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான்...

தனது அக்கா மகன் ஜீவி பிரகாஷ்குமார் குறித்து மனம் திறந்து பேசிய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் – அட பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். இதுவரை 7 முறை இந்திய அரசின் சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதை பெற்றிருக்கிறார். ஆஸ்கர் விருது வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்ந்த இசையமைப்பாளர். அவரது இசையால் வந்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்ற படங்களாக இருந்துள்ளன.

சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அதில் அடங்காத அசுரன்தான் பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. இதில் நடிகர் தனுஷூடன் ஏஆர் ரகுமானும் இணைந்து பாடியிருந்தார். தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்துக்கும் ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

- Advertisement -

சில தினங்களுக்கு முன், ஏஆர் ரகுமானின் மனைவி சாயிரா பானு, தன் கணவரை பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு பதில் தந்த ஏஆர் ரகுமானும், உடைந்த மனங்களின் கனத்தால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கிப் போகும் என்று கூறியிருந்தார். அந்த நேரத்தில் ஏஆர் ரகுமான் குறித்த பரவிய சில வதந்திகளும் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சொந்த சகோதரி மகன்தான் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார். தமிழில் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அவர் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

- Advertisement -

ஏஆர் ரகுமான் – சாயிரா பானு பிரிவுக்கு முன்னதாக கடந்த ஆண்டில் ஜீவி பிரகாஷ்குமார் – சைந்தவி பிரிவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அவர்களும் இதே போன்றுதான் பிரிவை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அப்போது அவரது தாய் மாமாவாக ஏஆர் ரகுமான், ஜீவி பிரகாஷ்குமாருக்கு அட்வைஸ் செய்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதை ஜீவி பிரகாஷ்குமார் ஏற்கவில்லை.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய ஏஆர் ரகுமான் கூறியதாவது, என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 3 சகோதரிகள்.நான் ஒருவன் மட்டுமே ஆண் குழந்தை. அதனால் சகோதரிக்கு ஆண் குழந்தையாக ஜீவி பிரகாஷ்குமார் பிறந்த போது, எனக்கு ஒரு சகோதரன் பிறந்து விட்டதாகவே எனக்கு ஒரு பீலிங் இருந்தது, என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்