- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா 48 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் - படத்தின் இயக்குனர் அவர்தான் -...

சூர்யா 48 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – படத்தின் இயக்குனர் அவர்தான் – படத்தை தயாரிக்கப் போவதும் அந்த நிறுவனம்தான்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் ரெட்ரோ. கடந்த ஆண்டு மே 1ம் தேதி இந்த படம் ரிலீஸானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் வணிக ரீதியான வெற்றிப் படம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ரசிகர்களிடம் பேசப்படும் ஒரு படமாக ரெட்ரோ இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடித்த 45வது படம் கருப்பு. நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். வக்கீல் அய்யனார் என 2 கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்துள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 19ம் தேதி ரிலீஸ் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்திலும் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தனது 47வது படத்திலும் இப்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதில் சூர்யா 47 படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே தற்போது லேட்டஸ்ட் தகவலாக நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 48வது படம் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் டைரக்ட் செய்கிறார். ஏற்கனவே சூர்யா நடித்த பசங்க எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். கடந்தாண்டில் அவர் இயக்கிய தலைவன் தலைவி படம் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து ஜெயராம் ஊர்வசி நடிக்கும் ஒரு படத்தை இப்போது பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 48வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ழகரம் பவுண்டேசன் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது.

நம்ம வீட்டுப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் தலைவன் தலைவி போன்ற பேமிலி டிராமா படங்களை கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பாண்டிராஜ். எதற்கும் துணிந்தவன் படம் சூர்யாவுக்கு தோல்வி படமாக இருந்தாலும் இந்த முறை பாண்டிராஜ் சூர்யா கூட்டணி சூர்யா 48 படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. விரைவில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்