தமிழக அரசு சார்பில் தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் விருதுக்கான பட்டியலை நேற்று அறிவித்தது. வரும் பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கில் தேர்வான கலைஞர்களுக்கு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளார்.
சிறந்த படம் – முதல் பரிசு ரூ. 2 லட்சம் 2ம் பரிசு – ரூ. 1 லட்சம் 3ம் பரிசு – ரூ. 75 ஆயிரம் சிறப்பு பரிசு – ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் சிறப்பு பரிசு – ரூ. 1.25 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது. விழாவில் விருது பெறும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு 1 சவரன் பதக்கம் இந்த விழாவில் வழங்கப்பட உள்ளது.
2019ம் ஆண்டு – சிறந்த படம் – அசுரன் சிறந்த நடிகர் – பார்த்திபன் (ஒத்த செருப்பு) சிறந்த நடிகை – மஞ்சு வாரியர் (அசுரன்) சிறந்த நடிகர் – (சிறப்பு பரிசு) கார்த்தி (கைதி) சிறந்த நடிகை – இந்துஜா (மகாமுனி) சிறந்த காமெடி நடிகை – கோவை சரளா (காஞ்சனா 3) சிறந்த வில்லன் நடிகர் – அர்ஜூன் தாஸ் (கைதி) சிறந்த காமெடி நடிகர் – கருணாகரன் (மான்ஸ்டர்) சிறந்த குணச்சித்திர நடிகர் – பிரகாஷ்ராஜ் (அசுரன்) சிறந்த குணத்திர நடிகை – ஸ்ரீ ரஞ்சனி (ஹவுஸ் ஓனர்) சிறந்த இயக்குனர் – பார்த்திபன் (ஒத்த செருப்பு சைஸ் ஏழு) சிறந்த உரையாடல் ஆசிரியர் – வெற்றிமாறன் (அசுரன்) சிறந்த இசையமைப்பாளர் – தமன் (மகாமுனி) சிறந்த பாடலாசிரியர் – கபிலன் (என்ஜிகே)
2020ம் ஆண்டு – சிறந்த படம் – கூழாங்கல் சிறந்த நடிகர் – சூர்யா (சூரரைப் போற்று) சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று) சிறந்த குணசத்திர நடிகர் – அமீர் பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் சிறப்பு விருது கமலி பிரம் நடுக்காவேரி சிறந்த நடிகர் – (சிறப்பு பரிசு) – தருண் குமார் (தேன்) சிறந்த நடிகை – (சிறப்பு பரிசு) அபர்நதி (தேன்) சிறந்த வில்லன் நடிகர் – நந்தா (வானம் கொட்டட்டும்) சிறந்த காமெடி நடிகர் – தர்ஷன் (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்) சிறந்த குணசித்திர நடிகை – வடிவுக்கரசி (ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல) சிறந்த இயக்குனர் – சுதா கொங்கரா (சூரரைப் போற்று) சிறந்த கதாசிரியர் – கணேசன் (மனிதம்) சிறந்த உரையாடல் ஆசிரியர் – ராசி தங்கதுரை (தேன்) சிறந்த இசையமைப்பாளர் – ஜீவி பிரகாஷ்குமார் (சூரரைப் போற்று) சிறந்த பாடலாசிரியர் – தாமரை (தாய் நிலம்)
2021ம் ஆண்டு – சிறந்த படம் – ஜெய்பீம் பெண்களை உயர்வாக சித்தரிக்கும் சிறப்பு படம் – (சிறப்பு விருது) நெற்றிக்கண் சிறந்த நடிகர் – ஆர்யா (சார்பட்டா பரம்பரை) சிறந்த நடிகை – லிஜோ மோல் ஜோஸ் (ஜெய்பீம்) சிறந்த குணச்சித்திர நடிகர் – மணிகண்டன் (ஜெய் பீம்) சிறந்த குணச்சித்திர நடிகை – ரேச்சல் ரெபேக்கா (கடைசி விவசாயி) சிறந்த நடிகர் – (சிறப்பு பரிசு) பசுபதி (சார்பட்டா பரம்பரை) சிறந்த நடிகை – ( சிறப்பு விருது) அமிர்தா சீனிவாசன் (இறுதிப் பக்கம்) சிறந்த காமெடி நடிகர் – யோகி பாபு (டாக்டர்) சிறந்த காமெடி நடிகை மதுமிதா சிறந்த இசையமைப்பாளர் – ஷான் ரோல்டன் (ஜெய்பீம்) சிறந்த பாடலாசிரியர் – தாமரை ( மாறா)
2022ம் ஆண்டு – சிறந்த படம் – கார்கி சிறந்த படம் – ( சிறப்பு விருது) இரவின் நிழல் பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் – (சிறப்பு விருது) அவள் அப்படித்தான் 2 சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு (டாணாகாரன்) சிறந்த நடிகை – சாய் பல்லவி (கார்கி) சிறந்த நடிகர் – (சிறப்பு விருது) அப்புகுட்டி (வாழ்க விவசாயம்) சிறந்த நடிகை (சிறப்பு விருது) – துஷாரா விஜயன் ( நட்சத்திரம் நகர்கிறது) சிறந்த இயக்குனர் – கௌதம் ராமச்சந்திரன் (கார்கி) சிறந்த கதாசிரியர் – பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே) சிறந்த இசையமைப்பாளர் – ஏஆர் ரகுமான் பொன்னியின் செல்வன் 1 என தமிழக அரசு விருதுகளை அறிவித்துள்ளது.





