- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கும் சிவாஜிக்கும் நான் சொன்னது நடந்தது… ஆனா அந்த நடிகைக்கு மட்டும் அப்படி நடக்கலே -...

ரஜினிக்கும் சிவாஜிக்கும் நான் சொன்னது நடந்தது… ஆனா அந்த நடிகைக்கு மட்டும் அப்படி நடக்கலே – ஓபனாக பேசிய பிரபல காமெடி நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் இருந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இளம் வயதில் வயதான கேரக்டரில் அதிக படங்களில் நடித்த நடிகர்களில் இவரும் ஒருவர். இவரது மாடுலேசன் டயலாக் டெலிவரியை ரசிகர்கள் பெரிய அளவில் ரசிப்பார்கள்.

அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி தான். பல படங்களில் வில்லன் குரூப்பில் ஒருவராகவும் அவர் நடித்திருக்கிறார். பல படங்களில் கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் என முன்னணி காமெடி நடிகர்களுடன் இவரது காமெடி கூட்டணி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இப்போது 90 வயது கடந்துள்ள நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டு முழுநேர ஓய்வில் இருந்து வருகிறார். இந்த வயதிலும் ஆரோக்கியமான ஒருவராக அவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு ஜோதிடர் என்பது பலரும் அறியாத ரகசியம். நடிகர் ரஜினிக்கு ஜாதகம் எழுதியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, நடிகர் திலகம் சிவாஜி சாருக்கு நான் ஜாதகம் பார்த்தேன். அப்போது உங்களுக்கு கவர்மெண்ட் போஸ்ட் கிடைக்கும் என்று சொன்னேன். அவர் ஆச்சரியப்பட்டார். நான் சொன்ன மாதிரியே அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்தது.

ஒருமுறை ரஜினி சார் ஜாதகத்தை பார்த்துட்டு நீங்க தமிழில் தான் பெரிய ஆளா வருவீங்க. சூப்பர்ஸ்டார் ஆவிங்க. இந்தி சினிமாவில் வாய்ப்புகள் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு நிறைய வரும். ஆனால் அதில் பெருசா நிக்க மாட்டீங்க. தமிழில்தான் சூப்பர் ஸ்டாராக இருப்பீங்க என்று சொன்னேன். நான் சொன்ன மாதிரியே அதுதான் அவருக்கு நடந்தது.

நான் சொன்னதெல்லாம் ஜாதகம் அப்படியே பலித்ததாக சொல்ல மாட்டேன். நடிகை ஆச்சி மனோரமாவுக்கு நான் சொன்ன ஜாதகம் ஒன்று கூட பலிக்கவில்லை. அவங்க ஜாதகம் தப்பா இருக்கலாம். இல்லை நான் சொன்னது கூட ஒருவேளை தப்பாக இருந்திருக்கலாம் என்று நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்